திருச்சி

11 வட்டங்களில் நாளை பொதுவிநியோகத் திட்ட சிறப்பு குறைதீர் முகாம்

13th Sep 2019 09:58 AM

ADVERTISEMENT

திருச்சி மாவட்டத்தில் உள்ள 11 வட்டங்களிலும் சனிக்கிழமை (செப்.14) பொதுவிநியோகத் திட்ட சிறப்பு குறைதீர்க்கும் முகாம் நடைபெறுகிறது.
இதுதொடர்பாக, மாவட்ட ஆட்சியர் சு. சிவராசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
திருச்சி மாவட்ட வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத்துறை மூலம் ஒவ்வொரு மாதமும் வட்ட அளவில் ஒரு கிராமத்தில் சனிக்கிழமையில் பொதுவிநியோகத் திட்ட சிறப்பு குறைதீர்க்கும் முகாம் நடத்தப்பட்டு வருகிறது. இதன்படி, வரும் சனிக்கிழமை 11 வட்டங்களில் குறைதீர் முகாம்கள் நடைபெறும்.
திருச்சி கிழக்கு வட்டத்தில் சங்கிலியாண்டபுரம், திருச்சி மேற்கு வட்டத்தில் உய்யக்கொண்டான் திருமலை-1, திருவரங்கம் வட்டத்தில் ஆளவந்தான்நல்லூர், மணப்பாறை வட்டத்தில் சாம்பட்டி, மருங்காபுரி வட்டத்தில் வளநாடு-2, லால்குடி வட்டத்தில் இடங்கிமங்கலம், மண்ணச்சநல்லூர் வட்டத்தில் மாதவபெருமாள்கோயில், முசிறி வட்டத்தில் வாளவந்தி, துறையூர் வட்டத்தில் எரகுடி-1, தொட்டியம் வட்டத்தில் திருச்சிபிரதானசாலை-1 திருவெறும்பூர் வட்டத்தில் அரசங்குடி ஆகிய பகுதிகளில் உள்ள நியாய விலைக் கடைகளில் பொதுவிநியோகத் திட்ட குறைதீர் முகாம் நடைபெறும். அந்தந்த வட்டங்களில் நியமிக்கப்பட்டுள்ள கண்காணிப்பு அலுவலர்கள் தலைமையில் இக்கூட்டம் நடைபெறும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ADVERTISEMENT
ADVERTISEMENT