ஸ்ரீரங்கம் கோயிலில் திருபவித்ரோத்ஸவ விழா தொடக்கம்: இன்று பூச்சாண்டி சேவை

ஸ்ரீரங்கம் அரங்கநாதர் திருக்கோயிலில் திருபவித்ரோத்ஸவ விழா திங்கள்கிழமை தொடங்கியது. வரும் 17 ஆம் தேதி வரை 9 நாள்கள் நடைபெறும் இவ்விழாவின் முக்கிய நிகழ்ச்சியான பூச்சாண்டி சேவை செவ்வாய்க்கிழமை நடைபெறவுள்
கோப்புப் படம்
கோப்புப் படம்

ஸ்ரீரங்கம் அரங்கநாதர் திருக்கோயிலில் திருபவித்ரோத்ஸவ விழா திங்கள்கிழமை தொடங்கியது. வரும் 17 ஆம் தேதி வரை 9 நாள்கள் நடைபெறும் இவ்விழாவின் முக்கிய நிகழ்ச்சியான பூச்சாண்டி சேவை செவ்வாய்க்கிழமை நடைபெறவுள்ளது.

ஸ்ரீரங்கம் கோயிலில் ஆவணி மாதத்தில் நடைபெறும் திருபவித்ரோத்ஸவ விழா பிரசித்தி பெற்றது. நிகழாண்டில் திங்கள்கிழமை தொடங்கிய இந்த விழாவின் முதல் நாளான திங்கள்கிழமை காலை 9.15 மணிக்கு  நம்பெருமாள் மூலஸ்தானத்தில் இருந்து புறப்பட்டு  9.45 மணிக்கு யாகசாலை (பூபரத்திய ஏகாதசி) மண்டபத்தை அடைந்தார். அங்கு 10.30 மணிக்கு திருவாராதனம் நடைபெற்றது.

பின்னர் மாலை 5 மணி முதல் இரவு 7 மணி வரை திருமஞ்சனம் கண்டருளினார். இதில் பக்தர்கள் திரளாகக் கலந்து கொண்டனர். தொடர்ந்து அலங்காரம் வகையறா கண்டருளி 11 மணிக்கு மூலஸ்தானம் சென்றடைந்தார் நம்பெருமாள்.
2 ஆம் நாளான செவ்வாய்க்கிழமை பூச்சாண்டி சேவை (அங்கோபாங்க) நடைபெற உள்ளது.  

விழாவின் 7 ஆம் நாளான வரும் 15 ஆம் தேதி நெல்லளவு கண்டருளுல் நிகழ்ச்சியும், நிறைவு நாளான 17 ஆம் தேதி தீர்த்தவாரி கண்டருளுதல் நடைபெறவுள்ளது. விழா ஏற்பாடுகளை கோயில் இணை ஆணையர் பொன்.ஜெயராமன் மற்றும் அறங்காவலர் குழுவினர் செய்து வருகின்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com