திருச்சி

மாற்றுத்திறன் குழந்தைகளுக்கான சிறப்பு மருத்துவ முகாம் விழிப்புணர்வு

10th Sep 2019 10:51 AM

ADVERTISEMENT

மணப்பாறை அடுத்த வையம்பட்டியில் அனைவருக்கும் கல்வி இயக்கம் சார்பில் மாற்றுத்திறன் கொண்ட குழந்தைகளுக்கான சிறப்பு மருத்துவ முகாம் குறித்த விழிப்புணர்வு பேரணி திங்கள்கிழமை நடைபெற்றது.
மணப்பாறை அடுத்த வையம்பட்டி பகுதியில் வரும் (செப். 13) வெள்ளிக்கிழமை ஒருங்கிணைந்த கல்வி திட்டத்தின் கீழ் வட்டார வள மையம் சார்பில் மாற்றுத்திறன் கொண்ட குழந்தைகளுக்கான சிறப்பு மருத்துவ முகாம் நடைபெற உள்ளது. இதையொட்டி, திங்கள்கிழமை வையம்பட்டி அரசு நடுநிலைப்பள்ளியிலிருந்து வட்டார கல்வி அலுவலர்கள் ஏ.சேகர், ஜோசப் ஆண்டனி ஆகியோர் தலைமையில் நடைபெற்ற பேரணியில் பள்ளி தலைமையாசிரியர்(பொ) ஏ.சக்திவேல், ஆசிரியர் பயிற்றுநர்(நிலை-1) இரா.சந்திரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஆசிரிய பயிற்றுநர்கள் நூற்றுக்கணக்கான மாணவ மாணவிகள் முகாம் குறித்து விழிப்புணர்வு பதாகைகளை கைகளில் ஏந்தி பேரணியாகச் சென்றனர். பள்ளி வளாகத்திலிருந்து புறப்பட்ட பேரணியை வட்டார கல்வி அலுவலர்கள் ஏ.சேகர் துவக்கி வைத்தார். பேரணியின்போது, பொதுமக்களுக்கு துண்டு பிரசுரங்கள் வழங்கப்பட்டது. 

ADVERTISEMENT
ADVERTISEMENT