திருச்சி

செப்.12 முதல் சம்ஸ்கிருத பயிற்சி தொடக்கம்

10th Sep 2019 10:43 AM

ADVERTISEMENT

திருச்சியில் செப். 12 முதல் 22 ஆம் தேதி வரை சம்ஸ்கிருதப் பேச்சுப் பயிற்சி முகாம் 12 இடங்களில் நடைபெற உள்ளன. நாள்தோறும் 2 மணி நேரம் நடைபெறவுள்ள இம்முகாமில் சம்ஸ்கிருதப் பேச்சுப் பயிற்சி இலவசமாக அளிக்கப்பட உள்ளது. இதற்காக, சமஸ்கிருதம் முன்பே தெரிந்திருக்க வேண்டிய அவசியமில்லை. 
கலந்துகொள்ள விரும்புவோர் ஸ்ரீரங்கத்தில் செயல்பட்டு வரும் சம்ஸ்கிருத பாரதி தொண்டு நிறுவனத்தை 98841 - 04024 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம் என அந்நிறுவனம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ADVERTISEMENT
ADVERTISEMENT