திருச்சி

என்ஐடி-யில் வேதிப் பொறியியல் கருத்தரங்கம் தொடக்கம்

10th Sep 2019 10:50 AM

ADVERTISEMENT

திருச்சி தேசிய தொழில்நுட்பக் கழகத்தில் மருத்துவப் பயன்பாட்டுக்கான பல்திறன் மற்றும் நவீன மூலப் பொருள்கள் குறித்த கருத்தரங்கம் திங்கள்கிழமை தொடங்கியது.
திருச்சி தேசிய தொழில்நுட்பக்கழகத்தின் வேதிப் பொறியியல் துறை சார்பில், மின்சக்தி, சுற்றுச்சூழல் மற்றும் மருத்துவப் பயன்பாட்டிற்கான பல்திறன் மற்றும் நவீன மூலப்பொருள்கள் குறித்த கருத்தரங்கானது செப்டம்பர் 9 ஆம் தேதி தொடங்கி 11ஆம் தேதி வரை நடைபெறுகிறது. இதன் தொடக்க விழா, திங்கள்கிழமை நடைபெற்றது. மலேசிய தொழில்நுட்பப் பல்கலைக்கழத்தின் துணைத் தலைவர் (ஆராய்ச்சி) அஹமத் ஃபவுசி இஸ்மாயில், கருத்தரங்கைத் தொடக்கி வைத்து வாழ்த்திப் பேசினார்.
வேதிப் பொறியியல் துறைத் தலைவர் மீரா ஷெரிபா பேகம், பேராசிரியர்கள் அனந்தராமன், அர்த்தநாரீசுவரன் ஆகியோர் கருத்தரங்கின் நோக்கம் மற்றும் செயல்பாடுகள் குறித்து விளக்கிப் பேசினர். என்ஐடி இயக்குநர் மினி ஷாஜி தாமஸ், பங்கேற்பாளர்களை வரவேற்றுப் பேசினார். ஆராய்ச்சித்துறை முதன்மையர் உமாபதி வாழ்த்து தெரிவித்தார். கருத்தரங்க செயலர் ஷீபா நன்றி கூறினார். கருத்தரங்கில், ஆராய்ச்சி மாணவர்கள், பேராசிரியர்கள் என 123 பேர் தங்களது ஆராய்ச்சிக் கட்டுரைகளை சமர்ப்பித்தனர்.  மேலும், பல்வேறு பல்கலைக் கழகங்களைச் சேர்ந்த 20 பேர் பல்வேறு தலைப்புகளில் உரையாற்றவுள்ளனர்.

ADVERTISEMENT
ADVERTISEMENT