திருச்சி

வேளாங்கண்ணிக்கு சிறப்பு ரயில் இயக்கம்

7th Sep 2019 10:33 AM

ADVERTISEMENT

எழும்பூரிலிருந்து வேளாங்கண்ணிக்கு செப்.7 ஆம் தேதி சிறப்பு ரயில் இயக்கப்படவுள்ளது.
இதுகுறித்து தெற்கு ரயில்வே திருச்சி கோட்ட மக்கள் தொடர்பு அலுவலகம் வெளியிட்டுள்ள அறிவிப்பு:
புனித ஆரோக்கிய அன்னை திருவிழாவையொட்டி ஏற்கெனவே பல்வேறு இடங்களிலிருந்து வேளாங்கண்ணிக்கு சிறப்பு ரயில்கள் இயக்கப்படுகின்றன. இந்நிலையில், பயணிகளின் கூடுதல் வசதிக்காக எழும்பூரிலிருந்து வேளாங்கண்ணிக்கு செப்.7 இரவு 11.50-க்கு புறப்படும் சிறப்பு ரயில் (06047) அடுத்த நாள் காலை 8 மணிக்கு சென்றடையும். அதுபோல், வேளாங்கண்ணியிலிருந்து செப்.8 இரவு 11.30-க்கு புறப்படும் சிறப்பு ரயில் (06048) அடுத்தநாள் காலை 8.50 மணிக்கு எழும்பூர் சென்றடையும். இந்த ரயில்கள் தாம்பரம், செங்கல்பட்டு, திண்டிவனம், விழுப்புரம், திருப்பாதிரிபுலியூர், சிதம்பரம், மயிலாடுதுறை, திருவாரூர், நாகபட்டினம் ஆகிய ரயில் நிலையங்களில் நின்று செல்லும்.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT