திருச்சி

விமான நிலைய ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்

7th Sep 2019 10:30 AM

ADVERTISEMENT

மத்திய அரசைக் கண்டித்து திருச்சி விமான நிலையத்தில் ஊழியர்கள் சங்க கூட்டமைப்பினர் வெள்ளிக்கிழமை ஆர்ப்பாட்டம் நடத்தினர். 
நாட்டில் உள்ள சர்வதேச விமான நிலையங்களை தனியார் மயமாக்கும் நடவடிக்கையை மத்திய அரசு மேற்கொண்டு வருகிறது. இதற்கு எதிர்ப்புத் தெரிவித்து நாட்டில் உள்ள விமான நிலைய ஊழியர் சங்கங்கள் பல்வேறு கட்டப் போராட்டங்களை நடத்தத் திட்டமிட்டுள்ளனர். 
அதன்படி அனைத்து சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் வெள்ளிக்கிழமை பிற்பகல் விமான நிலையங்களின் முன் அடையாள ஆர்ப்பாட்டம் நடத்த முடிவு செய்தனர். அதுபோல திருச்சி விமான நிலையத்தில் புதிய முனையம் முன்பு வெள்ளிக்கிழமை பிற்பகல் அடையாள ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அனைத்து சங்கங்களின் கூட்டமைப்பு ஒருங்கிணைப்பாளர் டி.யுவராஜேஷ் தலைமை வகித்தார். 
ஆர்ப்பாட்டத்தில் இந்திய விமான நிலைய ஆணையக் குழு ஊழியர் சங்கம், இந்திய விமான நிலைய பணியாளர்கள் சங்கம், அலுவலர்கள் சங்கம், பொறியாளர்கள் சங்கம், எஸ்சி-எஸ்டி நலச்சங்க நிர்வாகிகள்கலந்து கொண்டு மத்திய அரசுக்கு எதிராக கோஷங்களை எழுப்பினர்.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT