திருச்சி

"வனம் செய்வோம்": சமூக சிந்தனை திருவிழா

7th Sep 2019 10:33 AM

ADVERTISEMENT

ஹால்மார்க் வணிகப் பள்ளியில் வனம் செய்வோம் என்னும் பெயரில் சமூக சிந்தனைத் திருவிழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
திருச்சி டாஸ் அமைப்பு, ஹால்மார்க் வணிகப்பள்ளி சார்பில்  நடைபெற்றது. விழாவில், சமூக சிந்தனையை ஊக்குவிக்கும் வகையில் வனம் செய்வோம் எனும் தலைப்பில் காகித விளக்கக் காட்சி, புதையல் வேட்டை, வீதி நாடகம், குறும்படம், விவாதம், அறிவியில் கண்டுபிடிப்புகள் உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன.  வணிகப்பள்ளி இயக்குநர் ரா. ரமேஷ் தலைமையுரையும், நிர்வாகி ஓம்.பிரகாஷ் தொடக்கவுரையும் ஆற்றினர். 
சிறப்பு விருந்தினராக, லிட்டில் ஊட்டியை உருவாக்கிய டாக்டர். துரைசாமி கலந்துகொண்டு காடு வளர்ப்பு குறித்து சிறப்புரையாற்றினார். தொடர்ந்து, திருச்சி அதன் சுற்றுவட்டப் பகுதிகளில் 600 மரக்கன்றுகளை நட்டு பாதுகாத்து வரும் பாலகிருஷ்ணன் கர்ம வீரர் விருது வழங்கிக் கௌரவிக்கப்பட்டார். 
டாஸ் அமைப்பு நிர்வாகிகள் விக்டர் லாசரஸ், சுப்புரெத்தின பாரதி ஆகியோர் வாழ்த்தினர். போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ-மாணவியருக்கு சான்றிதழ்களும், முதல் இரண்டு இடங்களை பிடித்த கல்லூரிக்கு சுழற்கோப்பையும் வழங்கப்பட்டது.   இதில், திருச்சி, தஞ்சாவூர், பெரம்பலூர், புதுக்கோட்டை மாவட்டங்களைச் சேர்ந்த 15க்கும் மேற்பட்ட கல்லூரி மாணவர்கள் கலந்துகொண்டனர். விழாவை டாஸ் அமைப்பு நிர்வாகி சி.குமார் ஒருங்கிணைத்தார்.
 

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT