திருச்சி

மத்திய அரசைக் கண்டித்து காங்கிரஸ் ஆர்ப்பாட்டம்

7th Sep 2019 10:32 AM

ADVERTISEMENT

திருச்சியில் மத்திய அரசைக் கண்டித்து காங்கிரஸ் கட்சியினர் வெள்ளிக்கிழமை ஆர்ப்பாட்டம் நடத்தினர். 
திருச்சி மாவட்ட அலுவலகமான அருணாச்சல மன்றத்தில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்துக்கு திருச்சி மாநகர் மாவட்டத் தலைவர் ஜவகர் தலைமை வகித்தார். முன்னாள் மேயர் சுஜாதா,முன்னாள் மாவட்ட காங்கிரஸ் தலைவர் வழக்குரைஞர் மா. சரவணன்,விச்சு ஆகியோர் முன்னிலை வகித்தனர். 
ஆர்ப்பாட்டத்தில் மத்திய முன்னாள் அமைச்சரும், காங்கிரஸ் மூத்த தலைவருமான ப.சிதம்பரத்தை பொய் வழக்கில் கைது செய்த மத்திய பாஜக அரசை கண்டித்து கோஷங்களை எழுப்பினர். இதில் திருச்சி வேலுசாமி , சந்திரன்,  சிவாஜிசண்முகம்,விக்டர், அக்காய்சிவக்குமார் , மகேந்திரன், அருண், கருணாகரன், தனசேகர், ஜெகதீஸ்வரி, அப்துல் குத்தூஸ், ஆனந்தராஜ், அண்ணாதுரை,தியாகராஜன்,ராகவேந்திரா,ராஜ்மோகன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.  
 

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT