திருச்சி

போக்குவரத்துக்கு இடையூறாக விளம்பர பதாகை வைக்கத் தடை: ஆட்சியர்

7th Sep 2019 10:30 AM

ADVERTISEMENT

திருச்சி மாவட்டத்தில் பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படும் வகையில், முன் அனுமதியின்றி விளம்பர தட்டிகள் அமைக்கத் தடைவிதிக்கப்பட்டுள்ளது என ஆட்சியர் சு. சிவராசு தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் மேலும் தெரிவித்திருப்பது:
திருச்சி மாவட்ட , மாநகரப் பகுதிகளில் தமிழ்நாடு நகர்புற உள்ளாட்சி (டிஜிட்டல் பேனர்கள் மற்றும் தட்டிகள் வைத்திட அனுமதித்தல்) விதிகள் 2011-ன் விதிகளுக்கு மாறாக மாவட்ட நிர்வாகத்தின் முன்அனுமதியின்றி தனியார், அரசு நிலம் மற்றும் கட்டடம், சாலைகள், மைதானங்கள் உள்ளிட்ட பொதுவெளிகளில், பொதுமக்களுக்கு, சாலை பயன்பாட்டாளர், பாதசாரிகளுக்கு இடையூறு ஏற்படும் வண்ணம் விளம்பர, வரவேற்பு பதாகைகள் மற்றும் தட்டிகள் அமைக்க முற்றிலும் தடை விதிக்கப்பட்டுள்ளது.
அவ்வாறு அனுமதியின்றி அமைத்தால் அது சட்ட விரோத செயலாக கருதப்பட்டு, அச்செயல்களில் ஈடுபடுவோர் மீது காவல்துறை நடவடிக்கை எடுத்து, ரூ. 5000 அபராதமும், ஓராண்டு சிறை தண்டனையும் விதிக்க சட்டத்தில் வழிவகையுள்ளது.
 

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT