திருச்சி

நவீன முறையில் ரத்த நாள சிகிச்சை: காவேரி மருத்துவமனை சாதனை

7th Sep 2019 10:30 AM

ADVERTISEMENT

நவீன முறையில் ரத்த நாள சிகிச்சை அளித்து திருச்சி காவேரி மருத்துவமனை சாதனை புரிந்துள்ளது. 
இதுகுறித்து காவேரி மருத்துவமனை நிர்வாக இயக்குநர் மருத்துவர் தி. செந்தில்குமார் வெள்ளிக்கிழமை அளித்த பேட்டி:  
கடந்த சில நாள்களுக்கு முன் 62 வயதுள்ள முதியவர் ரத்த வாந்தியெடுத்தல் தொடர்பான புகார்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவரை எண்டோஸ்கோப்பி சோதனைக்குட்படுத்தியபோது ரத்தக் குழாயில் ஏற்பட்ட வீக்கம் காரணமாக உணவுக் குழாயில் சுருக்கம் இருப்பது கண்டறியப்பட்டது. மேலும் ரத்த உறையுடன் பெருநாடி புண்ணை ஊடுருவி உணவுக் குழாய் அரிக்கப்படுவதைக் காட்டியது. அதுமட்டுமின்றி இதய துடிப்பு அதிகரித்து, ரத்த அழுத்தம் குறைவாக இருந்தது. ஹீமோகுளோபின் 14 கிராமிலிருந்து 9 கிராமாகக் குறைந்தது.  இதைத் தொடர்ந்து தொராசிக் எண்டோவாஸ்குலர் பெருநாடி பழுதுபார்ப்பு என்ற நவீன முறையில் சிகிச்சை அளிக்க முடிவானது. அதன்படி கதிர்வீச்சு ஏற்படாத வகையில் அமைக்கப்பட்டுள்ள கேத் லேப் அறையில் சிகிச்சை அளிக்கப்பட்டது.  சிகிச்சையில் காலில் உள்ள தமணிகள் வழியாக நுழையும் இடுப்பில் ஒரு சிறிய கீறல் மூலம் ரத்த நாள வீக்கத்தை சரி செய்ய ஸ்டென்ட் கிராஃப்ட் எனப்படும் சாதனம் வெற்றிகரமாகப் பொருத்தப்பட்டது. 
சிகிச்சை அளிக்கப்பட்டு 10 நாள்களுக்கு பிறகு ரைலின் குழாய் வழியாக உணவளிக்கப்பட்டு 4 வாரங்களுக்கு பிறகு சராசரியான சிகிச்சை அளிக்கப்பட்டு அவர் பூரண குணமடைந்தார். இந்த சிகிச்சை சென்னை, புதுதில்லி, மும்பை போன்ற நகரங்களுக்கு அடுத்தபடியாக முதல் முறையாக திருச்சியில் சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது என்றார் அவர். 
ரத்த நாள அறுவைச் சிகிச்சை நிபுணர் வி.அருணகிரி, இருதய நோய் நிபுணர் மற்றும் துறை தலைவர் எஸ். அரவிந்தகுமார், இருதய நோய் மூத்த ஆலோசகர் ஆனந்த சுப்பிரமணியன் ஆகியோர் உடனிருந்தனர்.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT