திருச்சி

தலைக்கவசம் அணிந்து வந்து 7.5 பவுன் பறிப்பு

7th Sep 2019 10:35 AM

ADVERTISEMENT

திருச்சியில் நடந்து சென்ற பெண்ணிடம் தலைக்கவசம் அணிந்து வந்த இருவர் ஏழரை பவுன் தாலி சங்கிலியை பறித்துச் சென்றனர். 
திருச்சி பொன்னகர் விஸ்தரிப்பு பகுதியைச் சேர்ந்தவர் மார்டின் ஆரோக்கியசாமி (53). இவர் வீட்டின் அருகே பெட்டி கடை நடத்தி வருகிறார். இவரது மனைவி இமாகுலேட் மேரி(50) செவ்வாய்க்கிழமை இரவு வியாபாரம் முடித்துவிட்டு வீட்டிற்கு நடந்து சென்றார்.   அப்போது பைக்கில் தலைக்கவசம் அணிந்து வந்த மர்ம நபர்கள் இருவர் மேரி அணிந்திருந்த ஏழரை பவுன் தாலி சங்கிலியை பறித்து கொண்டு தப்பினர். புகாரின் பேரில் அமர்வு நீதிமன்ற போலீஸார் வழக்குப் பதிந்து மர்ம நபர்களைத் தேடி வருகின்றனர்.
 

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT