திருச்சி

தக்காளி கிலோ ரூ.5-க்கு  விற்றும் வாங்க ஆளில்லை!

7th Sep 2019 10:29 AM

ADVERTISEMENT

தங்கம்போல விற்று வந்த தக்காளி வெள்ளிக்கிழமை கிலோ ரூ. 5 -க்கு விற்கப்பட்டும் வாங்க ஆளில்லாததால் பறித்த தக்காளியை குப்பையில் கொட்டி வருகிறார்கள்.
தக்காளி விலை கடந்த சில மாதங்களுக்கு முன்  கிலோ ரூ.60 க்கு விற்கப்பட்டதால் நடுத்தர மக்களும், ஹோட்டல்காரர்களும் தக்காளியை கண்டு பயந்து வந்தனர். இன்று தக்காளி கிலோ ரூ.5 க்கு விலை இறங்கியபோதும் வாங்க ஆளில்லை.
இதுகுறித்து தக்காளி வியாபாரி வெங்கடேஷ் என்பவர் கூறுகையில் மழை காரணமாக தக்காளி விளைச்சல் அதிகமாகிவிட்டது. முன்பு ஒரு கூடை ரூ.500 க்கு விற்றது. இன்று அதே கூடை தக்காளியை ரூ.50- க்கும் குறைவாக விற்பனை செய்தும் வாங்க வியாபாரிகள் இல்லை. இதனால் பறித்த தக்காளியை விற்க முடியாமல் குப்பையில் கொட்டி வருகிறோம். தக்காளி பறிக்கும் ஆட்களுக்கு கூலிகூட கொடுக்க முடியாத நிலை உள்ளது. தக்காளியின் விலை மலிந்து நடுத்தெருவுக்கு வந்து விட்டது என்றார் அவர்.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT