திருச்சி

செப்.9-இல் நம்பெருமாள்  திருபவித்ரோத்ஸவ விழா

7th Sep 2019 10:32 AM

ADVERTISEMENT

ஸ்ரீரங்கம் அரங்கநாதர் திருக்கோயிலில் வரும் 9 ஆம் தேதி திருபவித்ரோத்ஸவ விழா தொடங்குகிறது. 
9 நாள்கள் நடைபெறும் விழாவில் மூலவர் திருமேனி பவித்ரத்தால் அலங்கரிக்கப்பட்டிருக்கும். இதில் 2 ஆம் திருநாளான 10 ஆம் தேதி பூச்சாண்டி சேவை (அங்கோபாங்க) நடைபெறுகிறது. இந்தச் சேவையை காண ஏராளமான பக்தர்கள் வருவர். இச்சேவையையொட்டி அன்று விஸ்வரூப தரிசனம் கிடையாது. இதைபோல கடைசி நாளான 17 ஆம் தேதி தீர்த்தவாரியை முன்னிட்டும் விஸ்வரூப தரிசனம் இல்லை.  ஏற்பாடுகளை கோயில் இணை ஆணையர் பொன்.ஜெயராமன் மற்றும் அறங்காவலர் குழுவினர் செய்கின்றனர்.
 

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT