திருச்சி

காரை கடத்தும் முன் இளைஞரிடம் பைக், பணம் பறித்த நால்வர்

7th Sep 2019 10:33 AM

ADVERTISEMENT

உப்பிலியபுரத்தில்  காரை கடத்திச் சென்றதாக கைது செய்யப்பட்ட நால்வரிடம் நடத்திய விசாரணையில் அவர்கள் காரை திருடும்  முன் ஒரு இளைஞரிடம் பைக்கையும், பணத்தையும் பறித்துச் சென்றது தெரிந்தது. 
திண்டுக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த நா. விஜயகுமார் (34), மு. பெருமாள் (28), ச. ஜெகன்(31), மேலும் இருவர் சேர்ந்து உப்பிலியபுரத்தில் ரவிச்சந்திரனுக்கு சொந்தமான காரின் ஓட்டுநர் முபாரக் அலியை தாக்கி விட்டு காரை கடத்திச் சென்றனர். இது தொடர்பாக நால்வரை அரவக்குறிச்சியில் கைது செய்து உப்பிலியபுரத்துக்கு போலீஸார் அழைத்துச் சென்றனர்.
விசாரணையில் அவர்கள் காரை உப்பிலியபுரத்தில் வாடகைக்கு எடுப்பதற்கு முன் அதே நாளில் புலிவலம் அரசு வனக் காப்புக் காட்டு பகுதியில் பைக்கில் சென்ற மண்பறையைச் சேர்ந்த பெ. குழந்தைவேலிடம் (31) வழி கேட்பதுபோல பாவனை செய்து அவருடைய முகத்தில் மிளகாய்ப் பொடி தூவி தாக்கிய பின்னர் அவருடைய பைக்கையும், ரூ. 1800-ஐயும் பறித்துச் சென்றது தெரிந்தது. இதையடுத்து  கோட்டப்பாளையத்தில் நிறுத்தியிருந்த குழந்தைவேலின் பைக்கை உப்பிலியபுரம் போலீஸார் மீட்டு புலிவலம் போலீஸிடம் ஒப்படைத்தனர். குழந்தைவேல் ஏற்கனவே கொடுத்த புகாரின் பேரில் புலிவலம் போலீஸார் வெள்ளிக்கிழமை வழக்குப் பதிவு செய்தனர்.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT