திருச்சி

வெளிநாட்டுக்கு கடத்த முயன்ற ரூ. 6.24 லட்சம் பறிமுதல்

4th Sep 2019 08:59 AM

ADVERTISEMENT

மலேசியாவுக்கு முறைகேடாகக் கொண்டு செல்ல முயன்ற ரூ. 6.24  லட்சம் ரொக்கத்தை  திருச்சி விமான நிலையத்தில் அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
திருச்சியிலிருந்து மலேசியாவுக்கு செவ்வாய்க்கிழமை அதிகாலை புறப்படத் தயாராக இருந்த விமானத்தில் பயணிகளின் உடைமைகளை சுங்கத்துறை உதவி ஆணையர் எம். பண்டாரம் தலைமையிலான அதிகாரிகள் சோதனை செய்தனர். 
அப்போது மன்னார்குடியைச் சேர்ந்த அன்புதாசன் என்பவர் தனது உடைமைகளுக்குள் ரூ. 2000 பணத்தாள்களை மறைத்து, முறைகேடாகக் கொண்டு செல்ல முயன்றது தெரியவந்தது. இதையடுத்து அவற்றை அதிகாரிகள் பறிமுதல் செய்து எண்ணியபோது அதில் ரூ. 6.24 லட்சம் இருந்தது. இதுகுறித்து வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT