திருச்சி

மாற்றுத்திறன் சிறார்களுக்கு சிறப்பு மருத்துவ முகாம்

4th Sep 2019 09:01 AM

ADVERTISEMENT

திருச்சி மாவட்டம், மணப்பாறை அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் அனைவருக்கும் கல்வி இயக்கம் மணப்பாறை வட்டார வள மையம் சார்பில் மாற்றுத்திறன் கொண்ட குழந்தைகளுக்கான சிறப்பு மருத்துவ முகாம் செவ்வாய்கிழமை நடைபெற்றது. 
ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி உதவித் திட்ட அலுவலர் முத்துச்செல்வன், உதவித் திட்ட ஒருங்கிணைப்பாளர் முத்துச்சாமி, வட்டார கல்வி அலுவலர் ஜேம்ஸ், ப்ளோரா ஆரோக்கியமேரி ஆகியோர் தலைமையில் நடைபெற்ற  முகாமுக்கு மாவட்ட ஒருங்கிணைப்பாளர் ஜான் சுரேஷ், வட்டார வள மைய மேற்பார்வையாளர் ஜான்போஸ்கோ ஆகியோர் முன்னிலை வகித்தனர்.  முகாமில் இயல்முறை பயிற்சியாளர் ரமேஷ், கண் மருத்துவர் மைதிலி, காது - தொண்டை - மூக்கு நிபுணர் சுமித்ரா, மனநல மருத்துவர் கிருஷ்ணமூர்த்தி, குழந்தைகள் நல மருத்துவர் பாலமுரளி, முடநீக்கியல் மருத்துவர் சையதுபக்கர், ராஷ்ட்ரிய பால் ஸ்வஸ்திய காரியக்கிராம் அலுவலர் சந்தோஷ் மற்றும் தொழில் நுட்ப வல்லுநர்கள் கலந்து கொண்டனர்.
முகாமில் அனைத்து வகை மாற்றுத்திறன் கொண்ட 300-க்கும் மேற்பட்ட குழந்தைகள் பயன்பெற்றனர். இதில் வட்டாட்சியர் உதவித்தொகை, முதல்வர் காப்பிடு விண்ணப்பம், உதவி உபகரணங்கள், மாற்றுத்திறனாளி தேசிய அடையாள அட்டைகள் வழங்கப்பட்டு பயன்பெற்றனர். முகாமில் பங்கேற்ற  அனைத்துக் குழந்தைகளுக்கும் பயணப்படி, மதிய உணவு வழங்கப்பட்டது.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT