திருச்சி

துவரங்குறிச்சியில் விநாயகர் ஊர்வலம்

4th Sep 2019 09:05 AM

ADVERTISEMENT

திருச்சி மாவட்டம், மணப்பாறையை அடுத்த துவரங்குறிச்சி பகுதிகளில் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு மொத்தம் 30 சிலைகள் வைக்கப்பட்டிருந்தன. அதில் இந்து முன்னணி சார்பில் வைத்திருந்த 20  விநாயகர் சிலைகள் திங்கள்கிழமை இரவு விசர்ஜனம் செய்யப்பட்டன.  தாரை தப்பட்டைகள் முழங்க அலங்கார தேர்களில் துவரங்குறிச்சி பேருந்து நிலையத்திற்கு சிலைகள் கொண்டு வரப்பட்டன. அங்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு விஸ்வஹிந்து பரிசத் மாநில துணைத் தலைவர் என்.ஆர்.என். பாண்டியன் காவி கொடியசைத்து  ஊர்வலம் புறப்பட்டது.
நிகழ்ச்சியில் இந்து முன்னணி கோட்டச் செயலர் இராம. சிவக்குமார், புறநகர் மாவட்ட செயலர் எஸ்.பி. தண்டபாணி, மாவட்ட பேச்சாளர் முத்துக்குமார், பாஜக மாவட்ட துணைத் தலைவர் பிரின்ஸ்.இளங்கோவன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
பலத்த பாதுகாப்புடன் தொடங்கிய ஊர்வலம்,  முக்கிய வீதிகள் வழியாக  பூதநாயகி அம்மன் ஆலய தெப்பக்குளத்தை அடைந்தது. அங்கு சிலைகள் கரைக்கப்பட்டன. 
பாதுகாப்பு பணியில் மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் ஜியாவுல் ஹக் தலைமையில் புதுக்கோட்டை, கரூர், அரியலூர் உள்ளிட்ட 5 மாவட்டங்களை சேர்ந்த சுமார் 700-க்கும் மேற்பட்ட போலீஸார், ஊர்க் காவல்படையினர் ஈடுபட்டனர்.
 

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT