திருச்சி

செப்.6 இல் 11 வட்டங்களில் அம்மா திட்ட முகாம்கள்

4th Sep 2019 09:03 AM

ADVERTISEMENT

திருச்சி மாவட்டத்தில் உள்ள 11 வட்டங்களில் வரும் வெள்ளிக்கிழமை (செப்.6) அம்மா திட்ட முகாம்கள் நடைபெறுகின்றன.
இதுதொடர்பாக, மாவட்ட ஆட்சியர் சு. சிவராசு வெளியிட்ட செய்திக் குறிப்பு:
பொதுமக்கள் தங்களது தேவைகளுக்காக அரசு அலுவலகங்களுக்கு சென்று வருவதில் ஏற்படும் காலதாமதம், இன்னல்களைப் போக்கவும் அந்தந்த கிராமங்களுக்கே அரசு அலுவலர்கள் சென்று கோரிக்கைகளை கேட்டு தீர்வு காணும் வகையில் திருச்சி மாவட்டத்தில் உள்ள 11 வட்டங்களிலும் தலா ஒரு கிராமம் வீதம் தேர்வு செய்யப்பட்டு வாரந்தோறும் அம்மா திட்ட முகாம் நடத்தப்படுகிறது. இதன்படி வரும் வெள்ளிக்கிழமை முகாம் நடைபெறவுள்ளது.
திருச்சி கிழக்கு வட்டத்தில் சிந்தாமணி, திருச்சி மேற்கு வட்டத்தில் தாமலவாரூபயம், திருவெறும்பூர் வட்டத்தில் கிளியூர், ஸ்ரீரங்கம் வட்டத்தில் சோமரசம்பேட்டை, மணப்பாறை வட்டத்தில் கே. பெரியபட்டி (தெற்கு), மருங்காபுரி வட்டத்தில் பளுவஞ்சி (கிழக்கு), லால்குடி வட்டத்தில் ஆலம்பாடி, மணச்சநல்லூர் வட்டத்தில் சிறுப்பத்தூர், முசிறி வட்டத்தில் திருத்தலையூர், துறையூர் வட்டத்தில் உப்பிலயபுரம் (தெற்கு), தொட்டியம் வட்டத்தில் நத்தம் ஆகிய கிராமங்களில் வெள்ளிக்கிழமை முகாம் நடைபெறும்.
இந்த முகாம்களில், அந்தந்தப் பகுதி பொதுமக்கள் கலந்து கொண்டு இலவச வீட்டுமனைப் பட்டா, முதியோர் உதவித்தொகை உள்பட சமூக பாதுகாப்புத் திட்டங்கள், பட்டா மாறுதல்கள், உழவர் பாதுகாப்பு அட்டைகள், பிறப்பு, இறப்புச் சான்றிதழ்கள், இருப்பிடச் சான்றிதழ், குடும்ப அட்டை, சாலை மற்றும் குடிநீர் வசதி குறித்து கோரிக்கை மனுக்கள் அளிக்கலாம். தகுதியான மனுக்களுக்கு முகாம் இடத்திலேயே தீர்வு காணப்படும் என்றார் ஆட்சியர்.
 

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT