திருச்சி

சரக்கு வேன் கவிழ்ந்த விபத்தில் உயிரிழந்தோருக்கு பாரிவேந்தர் எம்.பி. நிதியுதவி

4th Sep 2019 09:01 AM

ADVERTISEMENT

திருச்சி மாவட்டம், துறையூர் பகுதியில் கிணற்றில் வேன் கவிழ்ந்து உயிரிழந்த 9 பேர் குடும்பத்தினருக்கு பெரம்பலூர் நாடாளுமன்ற உறுப்பினர் பாரிவேந்தர் செவ்வாய்க்கிழமை  நிதியுதவி வழங்கினார்.
திருச்சி மாவட்டம்,  துறையூர் பகுதியில் கடந்த ஆக.18 ஆம் தேதி 17 பேர் சென்ற சரக்கு ஏற்றும் வேன் சாலையோர கிணற்றில் விழுந்ததில் 8  பேர் உயிரிழந்தனர். 9 பேர் படுகாயமடைந்தனர். இதையடுத்து மருத்துவமனைக்கு சென்று அவர்களுக்கு ஆறுதல் கூறிய பெரம்பலூர் நாடாளுமன்ற உறுப்பினர் பாரிவேந்தர் தனது சொந்த நிதியிலிருந்து உயிரிழந்தவர்களுக்கு தலா ரூ. 1 லட்சம் வழங்குவதாகக் கூறி முதல்கட்டமாக ரூ. 10 ஆயிரம் வழங்கினார்.
மீதித் தொகையை திருச்சி சமயபுரம் நெ.1 டோல்கேட் பகுதியில் உள்ள அவரது கட்சி அலுவலகத்தில்  உயிரிழந்தோர் குடும்பத்தினரிடம்  தலா ரூ. 90 ஆயிரத்திற்கான காசோலையாக வழங்கினார்.
அப்போது அவர் கூறியது: திருச்சி - நாமக்கல் நான்கு வழிச் சாலை அமைவதற்கும், திருச்சி - சென்னை தேசிய நெடுஞ்சாலையை 4 வழிச்சாலையிலிருந்து 6 வழிச் சாலையாக மாற்றவும் மத்திய அரசிடம் மனு அளித்துள்ளேன்.  பெரம்பலூர் நாடாளுமன்றத் தொகுதியில் உள்ள 6 சட்டப்பேரவைத் தொகுதிகளில்  வேலைவாய்ப்பு பயிற்சி முகாம் நடத்த இந்திய ஜனநாயகக் கட்சி முடிவெடுத்துள்ளது. பயிற்சி முடித்தவுடன் வேலை வழங்கவுள்ளோம். நிலத்தடி நீர் மட்டத்தை உயர்த்திட கிடப்பில் உள்ள  பண்ணைக் குட்டை திட்டத்தை மீண்டும் செயல்படுத்த 5 கிராமங்களைத் தேர்ந்தெடுக்கவுள்ளோம் என்றார்அவர்.
கட்சியின் மாநில பொதுச் செயலர் ஜெயசீலன், பார்க்கவன் முன்னேற்ற சங்க மாநிலத் தலைவர் சத்தியநாராயணன், திமுக மாவட்டச் செயலாளர் காடுவெட்டி தியாகராஜன், குளித்தலை எம்எல்ஏ ராமர், ஐஜேகே  திருச்சி மாவட்டச் செயலர் புள்ளம்பாடி செல்வகுமார் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT