திருச்சி

கே.கே. நகர் விஏஓ அலுவலகம் முன் விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

4th Sep 2019 09:03 AM

ADVERTISEMENT

கோரிக்கைகளை வலியுறுத்தி கேகேநகர் பகுதி வி.ஏ.ஒ. அலுவலகம் முன் விவசாயிகள் செவ்வாய்க்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். 
கே.கே.நகர் எல்.ஐ.சி காலனி கிராம நிர்வாக அலுவலகம் முன் விவசாயிகள், மார்க்சிஸ்ட் கட்சியினர் பங்கேற்ற ஆர்ப்பாட்டத்துக்கு, அம்பிகாபுரம் பகுதிச் செயலர் வேலுச்சாமி தலைமை வகித்தார். மாவட்ட செயற்குழு உறுப்பினர் வெற்றிச்செல்வன் உள்ளிட்டோர் விளக்கவுரையாற்றினர். 
இதில் மாநகராட்சியின் 38 ஆவது வார்டு பகுதியில் உள்ள செட்டியப்பட்டி குளத்தைத் தூர்வார வேண்டும். அதன்மூலம், மேட்டுக்கட்டளை வாய்க்கால் நீர் வழங்க வேண்டும் என பல்வேறு போராட்டங்கள் நடத்தப்பட்டுள்ளன. அதோடு, பொதுப்பணித் துறை அதிகாரிகளிடம் பல முறை மனு அளித்தும் இதுவரை நடவடிக்கை இல்லை. எனவே,குளத்தை தூர்வாரி நீர் திறந்துவிட வேண்டும் என கோஷங்கள் எழுப்பினர். அதோடு, காத்திருப்புப் போராட்டத்திலும் ஈடுபட்டனர். தகவவலறிந்து வந்த கேகே. நகர் போலீஸார் பேச்சு வார்த்தையில் ஈடுபட்டனர்.  பின்னர் வி.ஏ.ஓ. சுந்தர்ராஜ், துணை வட்டாட்சியர் தலைமையில் நடத்தப்பட்ட பேச்சுவார்த்தையில் செட்டியப்பட்டி குளத்திலிருந்து நீர் திறப்பது குறித்து செப்.11 ஆம் தேதி கிழக்கு வட்டாட்சியரிடம் பேச்சுவார்த்தை நடத்த முடிவு செய்யப்பட்டது. இதையடுத்து போராட்டம் கைவிடப்பட்டது.  மார்க்சிஸ்ட் கட்சி நிர்வாகிகள், விவசாயிகள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.
 

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT