திருச்சி

குடிநீர் வழங்கக் கோரி  துறையூர் அருகே மறியல்

4th Sep 2019 09:03 AM

ADVERTISEMENT

துறையூர் அருகே குடிநீர் வழங்க வலியுறுத்தி பொதுமக்கள் செவ்வாய்க்கிழமை காலிக் குடங்களுடன் சாலை மறியல் செய்தனர்.
உப்பிலியபுரம் ஊராட்சி ஒன்றியத்தைச் சேர்ந்த எ. பாதர்பேட்டை ஊராட்சிக்குள்பட்ட வெங்கட்டம்மாள் சமுத்திரம், கீழப்பட்டி, எ.பாதர்பேட்டை உள்ளிட்ட மூன்று கிராமங்களிலும் தண்ணீர் பிரச்னை உள்ளது.  இதுகுறித்து ஊராட்சி மற்றும் ஒன்றிய அலுவலகங்களில் முறையிட்டும் கிராம சபைக் கூட்டத்தில் கூறியும், ஆட்சியரிடம் மனு அளித்தும் பலனில்லை. 
இதனால் தினமும் தண்ணீரை விலை கொடுத்து வாங்குவதாலும், தண்ணீர் எடுக்க அதிக தூரம் செல்ல வேண்டியிருப்பதாலும் அதிருப்தியடைந்த அந்த பகுதி மக்கள் 200-க்கும் மேற்பட்டோர் துறையூரிலிருந்து புளியஞ்சோலை செல்லும் சாலையில் காலிக்குடங்களுடன் திடீர் மறியல் செய்தனர்.  தகவலறிந்த உப்பிலியபுரம் வட்டார வளர்ச்சி அலுவலர் குணசேகரன், துறையூர் வட்டாட்சியர் சத்யநாராயணன், காவல் ஆய்வாளர் அ. குருநாதன் உள்ளிட்டோர் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். இதையடுத்து மறியலை கைவிட்டனர்.
 

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT