திருச்சி

காந்தி பிறந்தநாள் வினாடி-வினா

4th Sep 2019 09:00 AM

ADVERTISEMENT

மகாத்மா காந்தியடிகளின் 150ஆவது பிறந்தநாளை முன்னிட்டு திருச்சியில் கல்லூரி மாணவர்களுக்கான வினாடி-வினா போட்டி நடைபெற்றது.
திருச்சி அகில இந்திய வானொலி நிலையமும், பிஷப் ஹீபர் கல்லூரியும் இணைந்து  கல்லூரி வளாகத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற போட்டியில் திருச்சி மாவட்டத்தில் இருந்து 10 கல்லூரிகளைச் சேர்ந்த 32 மாணவர், மாணவிகள் கலந்து கொண்டனர்.
பிஷப் ஹீபர் கல்லூரி முதன்மையர் சி. தனபால் முன்னிலையில் போட்டிகளை வானொலி நிலைய இயக்குநர் க. நடராசன் தொடக்கி வைத்தார். ஒருங்கிணைப்பாளர் பி.வி. தேவராஜ் நெறிப்படுத்தினார். நான்கு கட்டங்களாக நடைபெற்ற  போட்டியில் ஆர்விஎஸ் வேளாண் கல்லூரி அணி முதலிடமும், காவேரி மகளிர் கல்லூரி அணி இரண்டாமிடமும், அய்மான் கல்லூரி அணி மூன்றாமிடமும் பிடித்தன. முதல் 3 இடங்களைப் பிடித்த அணிகளைச் சேர்ந்த மாணவர், மாணவிகளுக்கு ரொக்கப் பரிசுகள் வழங்கப்பட்டன. பங்கேற்ற அனைவருக்கும் ஆறுதல் பரிசுகள் வழங்கப்பட்டன. பரிசுகளை நிலையத்தின் பொறியியல் பிரிவு துணைத் தலைமை இயக்குநர் டி.எஸ்.கே. பிள்ளை வழங்கினார்.
இந்த நிகழ்ச்சியானது அகில இந்திய வானொலியின் முதல் அலைவரிசையில் வரும் செப். 12, 19, 26, அக்.3 ஆகிய தேதிகளில் இரவு 8 மணிக்கு நடைபெறும் இளையபாரதம் நிகழ்ச்சியில் ஒலிபரப்பாகும் என வானொலி நிலைய செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT