திருச்சி

காஜாமியான் சுழற்கோப்பை ஹாக்கி: ஜமால்முகமது கல்லூரி அணி வெற்றி

4th Sep 2019 09:00 AM

ADVERTISEMENT

திருச்சியில் 19 ஆவது ஆண்டாக நடைபெற்ற கல்லூரிகளுக்கு இடையேயான காஜாமியான் சுழற்கோப்பைக்கான ஹாக்கி போட்டியில், ஜமால் முகமது கல்லூரி அணி வென்று கோப்பையை தக்க வைத்துக் கொண்டது.
திருச்சி, ஜமால் முகமது கல்லூரியின் உடற்கல்வி துறை சார்பில், 19-ஆம் ஆண்டாக கல்லூரிகளுக்கு இடையிலான காஜாமியான் சுழற்கோப்பைக்கான ஹாக்கி போட்டி நாக் அவுட் முறையில் செப்.1 முதல் 3ஆம் தேதி வரை நடைபெற்றது.
மாநிலம் முழுவதும் இருந்து 13 கல்லூரிகள் பங்கேற்ற போட்டியில் திருச்சி ஜமால் முகமது கல்லூரி, கோவை மாருதி உடற்கல்வியியல் கல்லூரி, திண்டுக்கல், ஜி.டி.என். கலைக் கல்லூரி, மதுரை அமெரிக்கன் கல்லூரி ஆகிய நான்கு கல்லூரி அணிகள் அரை இறுதிப் போட்டிக்குத் தகுதி பெற்றன. செவ்வாய்க்கிழமை நடைபெற்ற அரையிறுதி போட்டிகளில் திருச்சி ஜமால் முகமது கல்லூரி, கோவை, மாருதி உடற்கல்வியியல் கல்லூரியை 3-0 என்ற கோல் கணக்கிலும், மதுரை அமெரிக்கன் கல்லூரி, திண்டுக்கல், ஜி.டி.என். கலைக்கல்லூரியை 2-1 என்ற கோல் கணக்கிலும் வென்று இறுதி போட்டியில் விளையாடத் தகுதி பெற்றது. மூன்றாவது இடத்திற்கு நடைபெற்ற போட்டியில் திண்டுக்கல், ஜி.டி.என் கலைக்கல்லூரி, மாருதி உடற்கல்வியியல் கல்லூரியை 1-0 என்ற கோல் கணக்கில் வென்றது. இறுதிப் போட்டியில் திருச்சி ஜமால் முகமது கல்லூரி, மதுரை அமெரிக்கன் கல்லூரியை 1-0 என்ற கோல் கணக்கில் வென்று கோப்பையை தக்க வைத்து கொண்டது. கல்லூரி துணைச் செயலர் கே. அப்துஸ் சமது சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு திருச்சி ஜமால் முகமது கல்லூரி, மதுரை அமெரிக்கன் கல்லூரிகளுக்கு கோப்பைகள், சான்றிதழ்களை வழங்கினார்.
மூன்றாமிடம் பிடித்த திண்டுக்கல் ஜி.டி.என். கலைக் கல்லூரி, 4ஆவது இடம் பிடித்த கோவை மாருதி உடற்கல்வியியல் கல்லூரிகளுக்கும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன. மேலும்,  பரிசுத் தொகையாக முறையே ரூ. 10ஆயிரம், ரூ.7 ஆயிரம், ரூ.5 ஆயிரம், ரூ.3 ஆயிரத்தை கல்லூரிச் செயலர் ஏ.கே. காஜா நஜிமுதீன் வழங்கினார்.
கல்லூரிப் பொருளாளர் எம்.ஜே. ஜமால் முகமது, முதல்வர் எஸ். இஸ்மாயில் முகைதீன், இயக்குநர் சுய நிதிப்பிரிவு கே.என். அப்துல் காதர் நிஹால், விடுதி இயக்குனர் கே.என். முகமது பாசில், உடற்கல்வி இயக்குனர் பி.எஸ். ஷா இன்ஷா ஆகியோர் அணிகளுக்குப் பாராட்டு தெரிவித்தனர்.
 

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT