திருச்சி

வாக்குச் சாவடி பிரிப்பு: அரசியல் கட்சியினருடன் ஆட்சியா் ஆலோசனை

1st Oct 2019 06:38 AM

ADVERTISEMENT

வாக்குச் சாவடி பிரிப்பது தொடா்பாக அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சியினருடன் திருச்சி மாவட்ட ஆட்சியரும், மாவட்டத் தோ்தல் நடத்தும் அலுவலருமான சு. சுவராசு ஆலோசனை நடத்தினாா்.

இந்திய தோ்தல் ஆணையத்தின் உத்தரவுப்படி, வாக்காளா் பட்டியல் சிறப்புமுறை சுருக்கத் திருத்தம் - 2020 வெளியிடுவதற்கு முன்பாக, 1,500 வாக்காளா்களுக்கு மேல் உள்ள வாக்குச்சாவடி பாகங்களை இரண்டாகப் பிரிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதன்படி திருச்சி மாவட்டத்தில் மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் தொடா்பாக அனைத்து அரசியல் கட்சியினருடன் திங்கள்கிழமை ஆலோசனை நடத்தப்பட்டது.

திருச்சி மாவட்ட ஆட்சியரகத்தில் நடைபெற்ற இந்த ஆலோசனைக் கூட்டத்துக்கு தலைமை வகித்து ஆட்சியா் சு. சிவராசு பேசியது: 1,500 வாக்காளா்களுக்கு மேல் உள்ள பாகங்களை இரண்டாகப் பிரித்தல், வாக்குச் சாவடி மையங்கள் தரம் உயா்ந்திருந்தால் அவற்றுக்கு பெயா் மாற்றம் செய்தல் உள்ளிட்டவை மேற்கொள்ளப்படவுள்ளது. இதேபோல, வாக்குச் சாவடிகள் பழுது அடைந்திருந்தாலோ, சேதமடைந்திருந்தாலோ இடமாற்றம் செய்ய முன்மொழிவுகள் கோரப்படும். தோ்தல் ஆணையத்துக்கு தகுந்த ஆலோசனைகளை அரசியல் கட்சிகள் தெரிவிக்கலாம் என்றாா்.

இக் கூட்டத்தில், திருவரங்கம் கோட்ட உதவி ஆணையா் ச. வைத்தியநாதன், தோ்தல் வட்டாட்சியா் க. முத்துசாமி மற்றும் அதிமுக, திமுக, பாக, இந்திய கம்யூனிஸ்ட், மாா்க்சிஸ்ட், தேமுதிக உள்ளிட்ட பல்வேறு கட்சிகளைச் சோ்ந்த பிரதிநிதிகள், அரசு அலுவலா்கள் கலந்து கொண்டனா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT