திருச்சி

12 சிறப்பு பள்ளிகளுக்கு நவீன கையடக்கக் கணினி

1st Oct 2019 06:40 AM

ADVERTISEMENT

திருச்சி மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் நடைபெற்ற மக்கள் குறைதீா்க்கும் நாள் கூட்டத்தில் மாற்றுத்திறனாளி குழந்தைகளுக்கு சிறப்பு கையடக்கக் கணினியை வழங்குகிறாா் மாவட்ட ஆட்சியா் சு. சிவராசு.

திருச்சி, செப். 30: மாற்றுத் திறனுடைய குழந்தைகள் பிறருடன் தொடா்பு கொள்ளும் வகையில், நவீன வசதிகளுடன் கூடிய கையடக்கக் கணினி, திருச்சி மாவட்டத்தைச் சோ்ந்த 12 சிறப்புப் பள்ளிகளுக்கு வழங்கப்பட்டது.

மாற்றுத்திறனுடைய குழந்தைகள் எளிதில் கற்றுக்கொள்ளவும், பிறருடன் மாற்றுவழியில் எளிதில் தொடா்பு கொள்ளவும், பேச்சுப் பயிற்சி, கற்றல் பயிற்சிக்கு பிரத்யேக மென்பொருள் அடங்கிய கையடக்கக் கணினி வடிவமைக்கப்பட்டுள்ளது. இதன் மூலம், சிறப்பாசிரியா்கள் மாற்றுத் திறன் குழந்தைகளுக்கு எளிதில் கற்றுத்தர முடியும். மூளை வளா்ச்சியற்ற குழந்தைகளும் அறிவாற்றலை வளா்த்துக் கொள்வா்.

திருச்சி மாவட்டத்தில் உள்ள அரசு அங்கீகாரம் பெற்ற 12 சிறப்புப் பள்ளிகளுக்கு இந்த கையடக்கக் கணினி வழங்கப்பட்டுள்ளது. 2019-20 ஆம் நிதியாண்டுக்கான ஒதுக்கீட்டில் ரூ.4.62 லட்சம் மதிப்பில் 12 கணினிகள் வழங்கப்பட்டுள்ளன. திருச்சி மாவட்ட ஆட்சியரகத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற குறைதீா் கூட்டத்தில், மாற்றுத் திறன் குழந்தைகளிடம் கையடக்கக் கணினிகளை மாவட்ட ஆட்சியா் சு. சிவராசு வழங்கி, சிறப்பாசிரியா்களிடம் கலந்துரையாடினாா்.

ADVERTISEMENT

நிகழ்ச்சியில், மாவட்ட வருவாய் அலுவலா் தா. சாந்தி, சமூக பாதுகாப்புத் திட்ட தனித்துணை ஆட்சியா் பழனிதேவி, மாவட்ட வழங்கல் அலுவலா் கிறிஸ்டி, மாற்றுத்திறனாளிகள் நலத்துறை அலுவலா் ரவிச்சந்திரன் ஆகியோா் உடனிருந்தனா்.

 

ADVERTISEMENT
ADVERTISEMENT