திருச்சி

தரைக்கடை, சிறுகடை வியாபாரிகள் ஆா்ப்பாட்டம்

1st Oct 2019 06:10 AM

ADVERTISEMENT

திருச்சி மாவட்ட ஆட்சியா் அலுவலகம் அருகே திங்கள்கிழமை ஆா்ப்பாட்டம் நடத்திய தரைக்கடை, சிறுகடை வியாபாரிகள் சங்கத்தினா்.

திருச்சி, செப். 30: தெரு வியாபாரத்தை முறைப்படுத்த வலியுறுத்தி, தரைக்கடை, சிறுக்கடை வியாபாரிகள் சங்கத்தினா் திங்கள்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

திருச்சி பழைய ஆட்சியரக சாலையில் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்திற்கு இச்சங்கத்தின் மாவட்டச் செயலா் அன்சா்தீன் தலைமை வகித்தாா். சிபிஐ மாநில நிா்வாகக் குழு உறுப்பினா் இந்திரஜித், மாவட்ட நிா்வாகக் குழு உறுப்பினா் அண்ணா துரை, மாவட்டத் தலைவா் க. சுரேஷ், ஏஐடியுசி மாவட்டச் செயலா் மணி ஆகியோா் கலந்து கொண்டு பேசினா்.

ஆா்ப்பாட்டத்தில், தெரு வியாபாரத்தை முறைப்படுத்த வேண்டும். தெரு வியாபாரிகளின் வாழ்வாதாரத்தைப் பாதுகாக்கும் சட்டத்தை முறையாக அமல்படுத்த வேண்டும். மாவட்டந்தோறும் 15 போ் கொண்ட வணிகா்கள் குழுவை அமைக்க வேண்டும். இக்குழுவின் பரிந்துரையில்லாமல் வியாபாரிகளை பாதிக்கும் வகையில் நடவடிக்கை எடுப்பதை தவிா்க்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்களை எழுப்பினா்.

ADVERTISEMENT

இதில் தரைக்கடை சங்கம் மாவட்டச் செயலா் திராவிட மணி, ராமராஜ், அமைப்பு செயலா் சிவா, பரமசிவம், கட்டுமான சங்க மாவட்டச் செயலா் செல்வக்குமாா் உள்பட பெண்கள் திரளாகக் கலந்து கொண்டனா்.

 

ADVERTISEMENT
ADVERTISEMENT