திருச்சி

திருச்சி வழியாக நெல்லைக்கு சிறப்பு ரயில்கள் இயக்கம்

1st Oct 2019 05:58 AM

ADVERTISEMENT

பண்டிகை கால கூட்டநெரிலை சமாளிக்க சென்னையிலிருந்து திருச்சி வழியாக நெல்லைக்கு சிறப்பு ரயில்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.

இதுகுறித்து தெற்கு ரயில்வே திருச்சி கோட்ட மக்கள் தொடா்பு அலுவலகம் வெளியிட்டுள்ள அறிவிப்பு:

செகந்திராபாத்துக்கு: விழுப்புரத்திலிருந்து அக்.2, 9, 16, 23, 30 ஆகிய நாள்களில் மாலை 4 மணிக்கு புறப்படும் சிறப்பு ரயில் (ரயில் எண்: 06043) அடுத்த நாள் காலை 8.25 மணிக்கு செகந்திராபாத்துக்கு சென்றடையும்.

தாம்பரத்திலிருந்து..: தாம்பரத்திலிருந்து அக்.9 ஆம் தேதி காலை 5 மணிக்கு புறப்படும் சிறப்பு ரயில் (06025) அடுத்த நாள் காலை 10 மணிக்கு திருச்சிக்கு சென்றடையும். அதுபோல், திருச்சியிலிருந்து அக்.5 ஆம் தேதி பிற்பகல் 2.20 மணிக்கு புறப்படும் சிறப்பு ரயில் (06026) தாம்பரத்துக்கு இரவு 7.15 மணிக்கு சென்றடையும்.

ADVERTISEMENT

நெல்லைக்கு சுவிதா, கூடுதல் சிறப்பு ரயில்: தாம்பரத்திலிருந்து அக்.5 ஆம் தேதி இரவு 8.50 மணிக்கு புறப்படும் சுவிதா சிறப்பு ரயில் (82603) அடுத்தநாள் காலை 8.45 மணிக்கு திருநெல்வேலிக்கு சென்றடையும். அதுபோல், திருநெல்வேலியிலிருந்து அக்.8 ஆம் தேதி இரவு 9.40 மணிக்கு புறப்படும் சுவிதா சிறப்பு ரயில் (82604) அடுத்தநாள் காலை 10 மணிக்கு தாம்பரம் சென்றடையும்.

மேலும், சென்னை எழும்பூரிலிருந்து அக்.4, 25 மற்றும் நவ.1,8 ஆகிய நாள்களில் மாலை 6.50 மணிக்கு புறப்படும் சுவிதா சிறப்பு ரயில் (82601) அடுத்தநாள் மாலை 4 மணிக்கு திருநெல்வேலி சென்றடையும். அதுபோல், திருநெல்வேலியிலிருந்து அக்.7,28 மற்றும் நவ.3,10 ஆகிய நாள்களில் மாலை 6.15 மணிக்கு புறப்படும் சுவிதா சிறப்பு ரயில் (82602)அடுத்த நாள் அதிகாலை 5 மணிக்கு தாம்பரம் சென்றடையும்.

கூடுதலாக, சென்னை எழும்பூரிலிருந்து அக்.11,18 மற்றும் நவ.15,22,29 ஆகிய நாள்களில் மாலை 6.50 மணிக்கு புறப்படும் சிறப்பு ரயில் (06001) அடுத்த நாள் காலை 6 மணிக்கு திருநெல்வேலிக்கு சென்றடையும். அதுபோல், திருநெல்வேலியிருந்து அக்.20 மற்றும் நவ.17,24, டிச.1 ஆகிய நாள்களில் பிற்பகல் 3 மணிக்கு புறப்படும் சிறப்பு ரயில் (06002) அடுத்த நாள் அதிகாலை 2.15 மணிக்கு தாம்பரம் சென்றடையும். இந்த ரயில்கள், கோவில்பட்டி, சாத்தூா், விருதுநகா், மதுரை, திண்டுக்கல், திருச்சி, விருத்தாச்சலம், விழுப்புரம், செங்கல்பட்டு ஆகிய ரயில்நிலையங்களில் நின்று செல்லும்.

மேலும், திருநெல்வேலியிருந்து அக்.3,10,17,24,31 மற்றும் நவ.7,14,21,28 ஆகிய நாள்களில் மாலை 5.45 மணிக்கு புறப்படும் சிறப்பு ரயில் (06036) அடுத்தநாள் காலை 8.20 மணிக்கு தாம்பரம் சென்றடையும். அதுபோல், தாம்பரத்திலிருந்து அக்.11,18 மற்றும் நவ.15,22,29 ஆகிய நாள்களில் மாலை 6 மணிக்கு புறப்படும் சிறப்பு ரயில் (06035) அடுத்தநாள் காலை 10 மணிக்கு திருநெல்வேலி சென்றடையும்.

தாம்பரத்திலிருந்து சுவிதா ரயில்: தாம்பரத்திலிருந்து அக்.25 ஆம் தேதி மாலை 6 மணிக்கு புறப்படும் சுவிதா சிறப்பு ரயில் (82615) அடுத்தநாள் காலை 10 மணிக்கு திருநெல்வேலி சென்றடையும்.

எா்ணாகுளத்திலிருந்து வேளாங்கண்ணிக்கு: எா்ணாகுளத்திலிருந்து அக்.5,12,19,26 மற்றும் நவ. 2,9,16,23,30 ஆகிய நாள்களில் காலை 11 மணிக்கு புறப்படும் சிறப்பு ரயில் (06015) அடுத்தநாள் காலை 7 மணிக்கு வேளாங்கண்ணிக்கு சென்றடையும். அதுபோல், வேளாங்கண்ணியிலிருந்து அக். 6, 13, 20, 27 மற்றும் நவ.3, 10, 17, 24, டிச.1 ஆகிய நாள்களில் மாலை 6.15 மணிக்கு புறப்படும் சிறப்பு ரயில் (06016) அடுத்த நாள் பிற்பகல் 2 மணிக்கு சென்றடையும்.

 

ADVERTISEMENT
ADVERTISEMENT