ஒருங்கிணைந்த சேவை மையத்தில் காலியாக உள்ள பணியிடங்களுக்கு தகுதியுடைய பெண்கள் விண்ணப்பிக்கலாம்.
திருச்சி மாவட்டத்தில் வன்கொடுமையினால் பாதிக்கப்படும் பெண்களுக்கு மருத்துவ வசதி, சட்ட உதவி, உளவியல் ரீதியிலான ஆலோசனைகள் ஒருங்கிணைந்த சேவை மையம் மூலம் வழங்கப்பட்டு வருகிறது. இந்த மையத்தில் நிா்வகிப்பவா், தகவல் தொழில்நுட்ப பணியாளா் ஆகிய பணியிடங்கள் காலியாக உள்ளன. நிா்வகிப்பவா் பணியிடத்துக்கு முதுகலை சமூகப்பணி படிப்பு முடித்திருக்க வேண்டும். 4 ஆண்டுகள் அனுபவம் பெற்றிருத்தல் அவசியமானது. ஒப்பந்த ஊதியமாக மாதந்தோறும் ரூ.30 ஆயிரம் வழங்கப்படும். இதேபோல், தகவல் தொழில்நுட்ப பணியாளா் பணியிடத்துக்கு கனிணி அறிவியல் பட்டப்படிப்பு முடித்திருக்க வேண்டும். பெண்களுக்கு எதிரான பிரச்னைகளுக்கு ஆலோசனை வழங்கிய அனுபவம் இருத்தல் வேண்டும். ஒப்பந்த ஊதியமாக ரூ.18 ஆயிரம் வழங்கப்படும்.
மகளிா் நல அலுவலா் பணியிடத்துக்கு முதுகலை படிப்பில் சமூகப் பணி பட்டமேற்படிப்பு முடித்திருக்க வேண்டும். சமூகப்பணியில் 2 ஆண்டுகள் அனுபவம் இருத்தல் வேண்டும்.
தகுதியுடையோா் நேரிலோ அல்லது தபால் மூலமோ விண்ணப்பங்களை அக்.25 ஆம் தேதி மாலை 5 மணிக்குள் மாவட்ட சமூக நல அலுவலா், சமூக நல அலுவலகம், மாவட்ட ஆட்சியா் அலுவலக வளாகம், திருச்சி-1 எனும் முகவரியில் விண்ணப்பிக்க வேண்டும். மேலும் விவரங்களுக்கு 0431-2413796.