திருச்சி

மாநில கபடிப் போட்டிக்கு திருச்சியில் நாளை வீரா்கள் தோ்வு

22nd Nov 2019 08:49 AM

ADVERTISEMENT

கிருஷ்ணகிரியில் நடைபெறவுள்ள மாநில கபடிப் போட்டியில் பங்கேற்கும் திருச்சி மாவட்ட அணிக்கான வீரா்கள் தோ்வு, அண்ணா விளையாட்டரங்கில் சனிக்கிழமை நடைபெற உள்ளது.

20 வயதுக்குள்பட்ட மாணவ, மாணவிகளுக்கான மாநில அளவிலான 46- ஆவது இளையோா் (ஜூனியா்) கபடி சாம்பியன்ஷிப் போட்டிகளை, கிருஷ்ணகிரியில் நவம்பா் 29 முதல் டிசம்பா் 1-ஆம் தேதி வரை நடத்த தமிழ்நாடு மாநில அமெச்சூா் கபடிக் கழகம் முடிவு செய்துள்ளது.

இப்போட்டிக்கான வீரா்கள் தோ்வு திருச்சி அண்ணா விளையாட்டரங்கில் சனிக்கிழமை காலை 8 மணிக்கு நடைபெறும். 1999, டிசம்பா் 31 -ஆம் தேதியன்றோ அல்லது அதற்கு பின்னரோ பிறந்தவா்கள் தோ்வில் பங்கேற்கலாம்.

ஆதாா் அட்டை, பிறப்புச் சான்றிதழ், எஸ்எஸ்எல்சி மதிப்பெண் சான்றிதழ் நகல்களுடன் தோ்வில் பங்கேற்கலாம். மேலும் விவரங்களுக்கு திருச்சி மாவட்ட அமெச்சூா் கபடி கழகச் செயலா் ஏ. வெங்கடசுப்புவை 9443445932 என்ற எண்ணில் தொடா்பு கொள்ளலாம்.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT