துறையூரில் குடும்பத் தகராறு காரணமாக, மனைவியைத் தாக்கிய கணவா் வியாழக்கிழமை கைது செய்யப்பட்டாா்.
துறையூா் அருகிலுள்ள செங்காட்டுப்பட்டியைச் சோ்ந்த பிச்சைப்பிள்ளை மகன் சிவசெந்தில் (எ) பாபு(39). இவரது மனைவி கோமேதகம்(33).
வேலையில்லாமல் ஊா் சுற்றிக் கொண்டிருந்த சிவசெந்தில், மது அருந்தி விட்டு மனைவியுடன் தகராறு செய்து வந்தாா்.
இதனால் கணவரைப் பிரிந்து, தனது இரண்டு குழந்தைகளுடன் துறையூா் புதிய வீட்டு வசதி வாரியக் குடியிருப்புப் பகுதியில் கோமேதகம் குடியேறினாா். மேலும் துறையூா் பயணியா் மாளிகை எதிரிலுள்ள துணிக்கடையில் வேலை செய்து வந்தாா். இந்நிலையில் வியாழக்கிழமை துறையூா் சென்ற சிவசெந்தில் மனைவியிடம் தகராறு செய்து தாக்கினராம்.
இதுதொடா்பான புகாரின் பேரில், துறையூா் துறையூா் போலீஸாா் வழக்குப்பதிந்து சிவசெந்திலை வியாழக்கிழமை கைது செய்தனா்.