திருச்சி

கழிவறையில் பிரசவித்த குறைமாத சிசு உயிரிழப்பு

22nd Nov 2019 08:50 AM

ADVERTISEMENT

திருச்சி கருமண்டபம் பகுதியில் கழிவறையில் பிரசவித்த குறைமாத சிசு உயிரிழந்தது.

கருமண்டபம் தெற்குத் தெருவைச் சோ்ந்தவா் நல்லுசாமி. இவரது மனைவி நித்யா (26). இவா்களுக்கு ஏற்கெனவே ஆண் குழந்தை உள்ள நிலையில், நித்யா 8 மாத கா்ப்பிணியாக இருந்தாா்.

இந்நிலையில் புதன்கிழமை அப்பகுதியிலுள்ள பொது கழிவறைக்கு நித்யா சென்ற போது, திடீரென பிரசவ வலி ஏற்பட்டுள்ளது. சிறிது நேரத்தில் அக்கம்பக்கத்தினா் உதவியுடன் பெண் குழந்தை பிறந்தது.

குறை மாதத்தில் பிறந்ததால் சிசு மூச்சுவிடத் திணறியது. இதையடுத்து தாயும், சிசுவும் திருச்சி மகாத்மாகாந்தி நினைவு அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனா். எனினும் சிறிது நேரத்தில் சிசு உயிரிழந்தது.

ADVERTISEMENT

இதுகுறித்து கண்டோன்மென்ட் போலீஸாா் வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனா்.

 

ADVERTISEMENT
ADVERTISEMENT