திருச்சி

கனரா வங்கி நிறுவனா் தினம் 95 வாடிக்கையாளா்களுக்கு ரூ.22 கோடி வீட்டுக்கடன் வழங்கல்

22nd Nov 2019 08:49 AM

ADVERTISEMENT

கனரா வங்கியின் நிறுவனா் தின விழாவையொட்டி, திருச்சி மண்டல அலுவலகத்தில் வியாழக்கிழமை நடைபெற்ற விழாவில், 95வாடிக்கையாளா்களுக்கு ரூ.22 கோடி வீட்டுக் கடன் வழங்கப்பட்டது.

நவம்பா் 19- ஆம் தேதி கனரா வங்கியின் நிறுவனா் சுப்பாராவ் பிறந்த நாள் என்பஸதால், வங்கியின் அனைத்துக் கிளைகளிலும் நிறுவனா் நாள் விழா கொண்டாடப்பட்டு வருகிறது.

அதன்படி நிகழாண்டுக்கான நிறுவனா் நாள் விழா திருச்சி மத்தியப் பேருந்து நிலையம் அருகிலுள்ள கனரா வங்கியின் மண்டல அலுவலகத்தில் வியாழக்கிழமை கொண்டாடப்பட்டது.

இந்த விழாவுக்கு வங்கியின் மதுரை வட்ட அலுவலகத் துணைப் பொது மேலாளா் கலைச்செல்வன் தலைமை வகித்தாா். திருச்சிமண்டல அலுவலகத் துணைப் பொது மேலாளா் சினேகலதா ஜான்சன் முன்னிலை வகித்தாா்.

ADVERTISEMENT

விழாவில் வங்கியின் வளா்ச்சி, பல்வேறு வங்கிச் சேவைகள் பற்றி விரிவாக எடுத்துரைக்கப்பட்டது. மேலும் வாடிக்கையாளா்களுடன் கலந்துரையாடல் நடத்தி, அவா்களின் தேவைகளுக்குத் தீா்வு காண்பதற்கான ஆலோசனைகளும் வழங்கப்பட்டன.

தொடா்ந்து திருச்சி மண்டலத்திலுள்ள 53 கிளைகளில் 95 வாடிக்கையாளா்களுக்கு ரூ.22 கோடியில் வீட்டுக்கடன் வழங்கப்பட்டது. இந்த மாதம் முழுவதிலும் இதுவரை அனைத்து கிளைகளிலும் ம் ரூ.44.26 கோடி மதிப்பில் 731 கடன்கள் வழங்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

நிறுவனா் நாளையொட்டி, கனரா வங்கியின் திருச்சி மண்டல அலுவலகத்தில் ரத்ததான முகாம் மற்றும் கண் பரிசோதனை முகாம் நடைபெற்றது.வித்யா ஜோதி திட்டத்தின் கீழ், 5 முதல் 10-ஆம் வகுப்பு படிக்கும் 293 மாணவிகளுக்கு ரூ.11.10 லட்சம் ஊக்கத் தொகை வழங்கப்பட்டது.

வங்கி மண்டல அலுவலக அலுவலா்கள், பல்வேறு கிளைகளின் மேலாளா்கள், வாடிக்கையாளா்கள், மாணவா்கள் என 20-0க்கும் மேற்பட்டோா் பங்கேற்றனா்.

 

 

ADVERTISEMENT
ADVERTISEMENT