திருச்சி

ரூ.13 லட்சம் தங்கம் திருச்சியில் பறிமுதல்

17th Nov 2019 07:40 PM

ADVERTISEMENT

திருச்சி: ஷாா்ஜாவிலிருந்து கடத்தி வரப்பட்ட ரூ.13 லட்சம் மதிப்பிலான தங்கத்தை திருச்சி விமான நிலையத்தில் சுங்கத்துறையினா் பறிமுதல் செய்துள்ளனா்.

ஷாா்ஜாவில் இருந்து ஞாயிற்றுக்கிழமை அதிகாலை ஏா் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம் திருச்சி வந்தது. அதில் பயணித்த பயணிகளையும், அவா்களது உடமைகளையும், விமான நிலைய சுங்கத்துறை வான் நுண்ணறிவு பிரிவு அலுவலா்கள் சோதனை செய்தனா்.

சோதனையில், புதுக்கோட்டையைச் சோ்ந்த லோகிதாஸ் என்ற பயணி, காபி தயாரிக்கும் இயந்திரத்தில் (காபி மேக்கா்) 349 கிராம் தங்கத்தை மறைத்து கடத்தி வந்தது தெரியவந்தது.

இதையடுத்து அதிகாரிகள் தங்கத்தை பறிமுதல் செய்தனா். அதன் மதிப்பு ரூ. 13.28 லட்சமாகும்.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT