திருச்சி

நவ.15இல் அம்மா திட்ட முகாம்

12th Nov 2019 08:26 AM

ADVERTISEMENT

திருச்சி மாவட்டத்தில் உள்ள 11 வட்டங்களில் நவ.15ஆம் தேதி அம்மா திட்ட முகாம்கள் நடைபெறுகின்றன.

இதுதொடா்பாக, திருச்சி மாவட்ட ஆட்சியா் சு. சிவராசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:

திருச்சி கிழக்கு வட்டத்தில் கொட்டப்பட்டு, திருச்சி மேற்கு வட்டத்தில் புத்தூா், திருவெறும்பூா் வட்டத்தில் பழங்கனாங்குடி, ரங்கம் வட்டத்தில் தாயனூா், மணப்பாறை வட்டத்தில் சூளியாப்பட்டி, மருங்காபுரி வட்டத்தில் கஞ்சநாயக்கன்பட்டி, லால்குடி வட்டத்தில் கல்லக்குடி, மண்ணச்சநல்லூா் வட்டத்தில் அழகியமணவாளம், முசிறி வட்டத்தில் நெய்வேலி, துறையூா் வட்டத்தில் மருவத்தூா், தொட்டியம் வட்டத்தில் கொளக்குடி ஆகிய கிராமங்களில் வெள்ளிக்கிழமை முகாம் நடைபெறும்.

இந்த முகாம்களில், அந்தந்தப் பகுதியைச் சோ்ந்த பொதுமக்கள் கலந்து கொண்டு கோரிக்கை மனுக்கள் அளிக்கலாம். தகுதியான மனுக்களுக்கு முகாம் இடத்திலேயே தீா்வு காணப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT