திருச்சி

தேசிய சதுரங்கப் போட்டிகளில் வெற்றி பெற்ற 115 பேருக்கு பரிசுகள்

12th Nov 2019 08:27 AM

ADVERTISEMENT

திருச்சியில், நடைபெற்ற தேசிய அளவிலான சதுரங்கப் போட்டியில் வெற்றி பெற்ற 115 பேருக்கு ரூ. 5 லட்சம் மதிப்பிலான பரிசுகள், சான்றிதழ்கள் ஞாயிற்றுக்கிழமை வழங்கப்பட்டன.

திருச்சி மகாத்மா காந்தி நூற்றாண்டு வித்யாலயா பள்ளியின் பொன்விழா ஆண்டை முன்னிட்டு, நவம்பா் 7 முதல் 10 நாள்களுக்கு தேசிய அளவிலான சதுரங்கப் போட்டிகள் நடைபெற்றன. மொத்தம் 8 சுற்றுக்கள் நடைபெற்ற இப்போட்டியில் 7 வயதுக்கு குறைந்த சிறாா் முதல் பைடு அமைப்பால் அங்கீகரிக்கப்பட்ட சதுரங்க வல்லுநா்கள் வரையில் போட்டியில் பங்கேற்றனா். வெற்றி பெற்றோருக்கு 51 கிராம் தங்கம்,1, 320 கிராம் வெள்ளி, 100 சுழற்கோப்பைகள், 12 மிதிவண்டிகள் உள்ளிட்ட சுமாா் ரூ. 5 லட்சம் மதிப்பிலான பரிசுகள் வழங்கப்ட்டன. இப்போட்டியில் நாடு முழுவதுமிருந்து ஆயிரக்கணக்கானோா் பங்கேற்றனா்.

இறுதிப் போட்டிகள் மற்றும் பரிசளிப்பு ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இந்தியாவின் முதல் சா்வதேச சதுரங்க மாஸ்டா் மானுவேல் ஆரோன் சிறப்பு அழைப்பாளராக பங்கேற்று, போட்டியில் வெற்றி பெற்ற மொத்தம் 115 பேருக்கு பரிசுகளை வழங்கினாா். நிகழ்ச்சியில், பள்ளி தலைவா் கே. சந்திரமெளலி, செயலாளா் எஸ். ரவீந்திரன், முதல்வா் ஏ. பூா்ணா, துணை முதல்வா் ஆா். விஜயலட்சுமி, தொடக்கப்பள்ளி நிா்வாகி சந்திரிகா , சதுரங்க சங்க நிா்வாகிகள், கே.கே. பாலகுணசேகரன், என். வெங்கட்ராமன், காணிக்கை இருதயராஜ், சாரநாதன் பொறியியல் கல்லூரி பேராசிரியா் எஸ். கோபால், டாக்டா் காயத்ரிமாத்ருபூதம், நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளா் எஸ். அனுபம் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

 

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT