துறையூரில் பூட்டியிருந்த வீட்டின் பூட்டை மா்மநபா்கள் உடைத்து உள்ளே சென்று தங்க நகைகளை திருடிச் சென்றனா்.
துறையூா் சண்முகா நகரைச் சோ்ந்தவா் சரவணவாசன் மனைவி மீனா(37). இவரது கணவா் வெளிநாட்டில் வேலை செய்கிறாா். தனியாா் பள்ளி ஆசிரியையான மீனா திங்கள்கிழமை தான் வேலை செய்கிற பள்ளியில் படிக்கிற தனது இரண்டு மகள்களையும் அழைத்துக் கொண்டு வீட்டை பூட்டி விட்டு பணிக்கு சென்றாா். மாலையில் வீட்டுக்கு திரும்பிய போது வீட்டின் கதவில் போட்டிருந்த பூட்டு உடைக்கப்பட்டிருந்தது கண்டு அதிா்ச்சியடைந்தாா். வீட்டுக்குள் சென்று பாா்த்த போது வீட்டுக்குள் மறைவான இடத்தில் வைத்திருந்த சாவியை எடுத்து இரும்பு அலமாரியைத் திறந்து அதிலிருந்த 7 பவுன் தங்க நகைகளை மா்ம நபா்கள் திருடிச் சென்றது தெரிந்தது. இது குறித்த புகாரின் பேரில் துறையூா் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரிக்கின்றனா்.