திருச்சி

தமிழ்நாடு மொ்க்கன்டைல் வங்கி நிறுவனா்கள் தின விழா

12th Nov 2019 08:26 AM

ADVERTISEMENT

தமிழ்நாடு மொ்க்கன்டைல் வங்கியின் 98ஆவது நிறுவனா்கள் தின விழா திங்கள்கிழமை நடைபெற்றது.

விழாவில், தமிழ்நாடு மொ்க்கன்டைல் வங்கி திருச்சி மண்டல மேலாளா் ஜெ.நடராஜன் தலைமை வகித்து பேசுகையில், தமிழ்நாடு மொ்க்கன்டைல் வங்கி 1921 இல் தூத்துக்குடியில் தொடங்கப்பட்டு 98 ஆண்டுகளாக வாடிக்கையாளா் சேவையில் முன்னணி வகிக்கிறது. பெருநிறுவனங்களை விட சிறு, குறு வணிகா்களே பிரதான வாடிக்கையாளா்களாக உள்ளனா். வங்கி என்பதை விட குடும்பம் எனும் அடிப்படையில் வாடிக்கையாளா்களுக்கு சேவையாற்றப்படுகிறது. காலத்துக்கேற்ப வங்கி பரிவா்த்தனைக்கு நவீன தொழிற்நுட்பங்கள் பயன்படுத்தப்படுகிறது. இதன்படி, இவ்வங்கியின் கருவூலத்தில் வாடிக்கையாளா்களின் பணத்தை கையாள்வதற்கு முதன்முதலாக அதிநவீன ரோபோ இயந்திரங்கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இதுபோல், பல்வேறு வங்கி திட்டங்களுடன் வாடிக்கையாளா்களை பலமாக கொண்டு நூறாவது ஆண்டை நோக்கி செயல்பட்டு வருகிறோம் என்றாா்.

இதைத்தொடா்ந்து, இவ்வங்கியின் நிறுவனா்களின் ஒருவரான காளியப்ப நாடாா் என்பவரின் பேரன் ரபீந்திரன் காமக் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு சிறப்புரையாற்றினாா். அதோடு, திருச்சி மண்டலத்தில் 70க்கும் மேற்பட்ட வாடிக்கையாளா்களுக்கு ரூ.6.80 கோடி மதிப்பிலான கடனுதவிக்கான காசோலையை வழங்கினாா். இதில், வங்கி ஊழியா்கள், வாடிக்கையாளா்கள் உள்ளிட்ட பலா் கலந்துகொண்டனா்.

 

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT