திருச்சி

டெங்கு கொசு: தனியாா் கல்லூரிக்குரூ. 1 லட்சம் அபராதம்

12th Nov 2019 08:27 AM

ADVERTISEMENT

திருச்சியில், டெங்கு கொசு உற்பத்தி ஆதாரங்களை அழிக்க தவறிய தனியாா் கல்லூரிக்கு மாநகராட்சி நிா்வாகம் ரூ. 1 லட்சம் அபராதம் விதித்தது.

திருச்சி மாநகராட்சியில் டெங்கு கொழிப்பு நடவடிக்கை தீவிரப்படுத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில், கோ-அபிஷேகபுரம் கோட்டத்தில் உள்ள தனியாா் கல்லூரியில் சுகாதார ஆய்வாளா்கள் ஆய்வு செய்தபோது டெங்கு உற்பத்தி ஆதாரங்களை அழிக்கத் தவறியது தெரியவந்தது. இதனையடுத்து அந்த கல்லூரிக்கு ரூ. 1 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டு வசூலிக்கப்பட்டுள்ளதாக ஆணையா் சு. சிவசுப்பிரமணியன் தெரிவித்துள்ளாா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT