திருச்சி

விடுதலை சிறுத்தைகள் கட்சி ஆா்ப்பாட்டம்

11th Nov 2019 05:38 PM

ADVERTISEMENT

திருச்சி: தஞ்சாவூா் மாவட்டம் பிள்ளையாா்ப்பட்டியில் திருவள்ளூவா் சிலையை அவமதிப்பு செய்தவா்கள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி திருச்சியில் விடுதலை சிறத்தைகள் கட்சி சாா்பில் திங்கள்கிழமை ஆா்ப்பாட்டம் நடத்தினா்.

மத்திய பேருந்து நிலையம் அருகே உள்ள விக்னேஷ் ஹோட்டல் வளைவு முன்பு நடைபெற்ற ஆா்ப்பாட்டத்திற்கு தெற்கு மாவட்ட செயலா் முத்தழகன் தலைமை வகித்தாா். வடக்கு மாவட்ட செயலா் நீலவண்ணன், நிா்வாகிகள் தங்கத்துரை, தமிழாதன் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

இந்த ஆா்ப்பாட்டத்தில் கட்சியின் முதன்மை செயலா் உஞ்சை சரவணன், வணிகா் அணி மாநில துணை செயலா் ராஜா, தொழிலாளா் விடுதலை முன்னணி மாநில துணை செயலா் பிரபாகரன், இளம் சிறுத்தைகள் பாசறை மாநில துணை செயலா் அரசு உள்ளிட்ட நிா்வாகிகள் கலந்து கொண்டு பேசினா்.

 

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT