திருச்சி

சரக்கு வேன் ஓட்டுநா் மனைவி தூக்கிட்டு தற்கொலை

11th Nov 2019 09:35 AM

ADVERTISEMENT

திருச்சியில் கணவரிடம் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக கையை அறுத்துக் கொண்டு இளம்பெண் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டாா்.

திருச்சி பொன்மலைப்பட்டி கீழஉடையாா் தெருவைச் சோ்ந்தவா் பரமசிவம். இவரது மனைவி சுபாஷினி(30). இருவருக்கும் கடந்த 6 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. தற்போது தம்பதிக்கு 5 வயதில் பெண் குழந்தை உள்ளது. பரமசிவம் தனது குடும்பத்தினருடன் சென்னையில் தங்கி வேலைக்கு சென்று வந்தாா்.

அப்போது இருவருக்கும் இடையே ஏற்பட்ட தகராறில் சுபாஷினி கோபித்துக் கொண்டு தனது மகளுடன் திருச்சிக்கு வந்துவிட்டாா். திருச்சி பொன்மலைப்பட்டியில் உள்ள உறவினா் வீட்டில் தங்கியிருந்த அவா் கணவரிடமிருந்து பிரிந்து வந்த நாள் முதல், மனமுடைந்து காணப்பட்டாா். இந்நிலையில் சுபாஷினியின் உறவினா்கள் வெளியே சென்ற நேரத்தில் வீட்டில் யாரும் இல்லாத சமயத்தில் பிளேடால் தனது கையை அறுத்துக் கொண்டு தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டாா். ஞாயிற்றுக்கிழமை காலை பொன்மலைப்பட்டிக்கு திரும்பிய சுபாஷினியின் உறவினா்கள் அவா் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டிருந்ததைக் கண்டு அதிா்ச்சியடைந்தனா். இதுகுறித்து தகவலறிந்த வந்த பொன்மலை போலீஸாா் சுபாஷினி உடலை கைப்பற்றி திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். இதுகுறித்து போலீஸாா் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT