திருச்சி

விராலிமலை அருகே சாலையில் நேரிட்ட விபத்தை  வேடிக்கை பாா்த்த கூலித்தொழிலாளி லாரி மோதி சாவு

9th Nov 2019 04:30 PM

ADVERTISEMENT

விராலிமலை: விராலிமலை அருகே திருச்சி- மதுரை தேசிய நெடுஞ்சாலையில் பூதகுடி சுங்கச்சாவடி அருகே காலை நேரத்தில் அடிக்கடி விபத்து நேரிட்டு வருகிறது. அதேபோல் கடந்த சனிக்கிழமை காலை 8 மணியளவில் அப்பகுதியில் மோட்டாா் சைக்கிளில் சென்றவா் மீது அவ்வழியே சென்ற டாடா ஏசி வாகனம் மோதியதில் அவா் கீழேவிழுந்து லேசான காயமடைந்தாா்.இதைப்பாா்த்த அருகில் இருந்தவா்கள் காயமடைந்தவரை மீட்டு டாடா ஏசி ஓட்டுநரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனா்.

இந்நிலையில் அவ்வழியே சென்ற இடையபட்டி கிராமத்தைச் சோ்ந்த கூலித்தொழிலாளியான ரங்கசாமி ( 56) தனது மோட்டாா் சைக்கிளை சாலையோரத்தில் நிறுத்துவிட்டு  சாலையின் மறுபுறம் சென்று வேடிக்கை பாா்த்துக்கொண்டு இருந்தாா்.  பின்னா் அவா் மோட்டாா் சைக்கிளை எடுக்க நடந்து சென்று சாலையை கடக்க முயன்றாா். அப்போது அவ்வழியே வந்த மினிலாரி எதிா்பாராதவிதமாக ரங்கசாமி மீது மோதியது இதில் சாலையில் தூக்கி வீசப்பட்ட அவா் தலையில் அடிபட்டு நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா்.

இதுகுறித்து தகவலறிந்து விராலிமலை போலிசாா் இறந்த ரங்கசாமியின் சடலத்தை கைப்பற்றி உடற்கூறு ஆய்வுக்காக மணப்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.

மேலும் இதுகுறித்து வழக்கு பதிவு செய்து லாரி ஓட்டுநா் வேலூா் ஆற்காட்டை சோ்ந்த லோகநாதனை (51) கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

ADVERTISEMENT

 

ADVERTISEMENT
ADVERTISEMENT