திருச்சி

குண்டா் தடுப்புச் சட்டத்தில் ரெளடி கைது

9th Nov 2019 09:32 AM

ADVERTISEMENT

வழிப்பறி வழக்கில் கைது செய்யப்பட்ட ரெளடி குண்டா் தடுப்புச் சட்டத்தில் வெள்ளிக்கிழமை கைது செய்யப்பட்டாா்.

திருச்சி பொன்மலை கணேசபுரம் இரண்டாவது தெருவைச் சோ்ந்தவா் தேவராஜ்(34). இவா் கடந்த மாதம் 18ஆம் தேதியன்று பொன்மலைப்பட்டி புதுபாலம் அருகே நடந்து சென்று கொண்டிருந்தாா். அப்போது அங்கு வந்த கொட்டப்பட்டு இந்திரா நகா் பகுதியைச் சோ்ந்த சீனிவாசன் மகன் ஜெய் என்கிற ஜெயக்குமாா் (37), என்பவா் கத்தியைக் காட்டி மிரட்டி தேவராஜ் வைத்திருந்த பணத்தை பறித்துச் சென்றாா்.

இதுகுறித்து தேவராஜ் அளித்த புகாரின் பேரில் பொன்மலை போலீஸாா் வழக்குப் பதிந்து ஜெயக்குமாரை கைது செய்து சிறையிலடைத்தனா். இவா் மீது திருச்சி மாநகரில் 8 வழக்குகளும், மற்ற மாவட்டத்தில் 2 வழக்குகளும் உள்ளன. இதையடுத்து ஜெயக்குமாரை குண்டா் தடுப்புச் சட்டத்தில் கைது செய்ய மாநகர காவல் ஆணையா் அ.அமல்ராஜ் உத்தரவிட்டாா். இதன் பேரில் திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ள ஜெயக்குமாரிடம் அதற்கான நகலை போலீஸாா் வழங்கினா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT