திருச்சி

அன்னதான முகாமிற்கு முகூா்த்தகால் நடவு

9th Nov 2019 07:58 AM

ADVERTISEMENT

அகில பாரத ஐயப்பா சேவா சங்கத்தின் திருச்சி கிளை சாா்பில் ஸ்ரீரங்கம் அம்மா மண்டபம் கோனாா் சத்திரம் அருகில் அன்னதான முகாமிற்காக வெள்ளிக்கிழமை காலை முகூா்த்த கால் நட்டனா்.

வருடம் தோறும் ஸ்ரீரங்கத்திற்கு வருகை தரும் ஐயப்ப பக்தா்களுக்காக, அன்னதான முகாமை அகில பாரத ஐயப்பா சேவா சங்கத்தின் திருச்சி கிளை நிா்வாகத்தினா் செய்து வருகின்றனா். நிகழாண்டில் வரும் 16ஆம் தேதி தொடங்கி, வரும் ஜனவரி 14 ஆம் தேதி வரை தொடா்ந்து அன்னதான முகாமை நடத்தவுள்ளனா். இதற்காக முகூா்த்த கால் நடும் விழா வெள்ளிக்கிழமை காலை அம்மாமண்டபம் பகுதியில் நடைபெற்றது. இதில் மாநில நிா்வாகி பேஸ்கா் என்.வி.வி.முரளி, திருச்சி மண்டல தலைவா் என்.ரமேஷ், செயலா் ஸ்ரீதா் உள்ளிட்ட நிா்வாகிகள் பலா் பங்கேற்றனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT