துறையூா் அன்னை அங்காளபரமேஸ்வரியம்மன் கோயிலில் முருகன் திருக்கல்யாணத்துடன் கந்த சஷ்டி விழா ஞாயிற்றுக்கிழமை நிறைவடைந்தது.
இக்கோயிலில் கந்த சஷ்டி பெருவிழா தொடங்கி தினமும் சிறப்பு அபிஷேகம், தீபாரதனை நடைபெற்றது. ராஜ, விபூதி, சண்முக, ஸ்கந்தா், வேடன் அலங்காரத்தில் பாலசுப்பிரமணிய சுவாமி காட்சியளித்தாா். அக். 31-ல் திருவிளக்கு பூஜை நடந்தது. சனிக்கிழமை அங்காளபரமேஸ்வரிக்கும், முருகனுக்கும் மகா அபிஷேகம், ஆராதனையுடன் கொடியிறக்கப்பட்டது. ஞாயிற்றுக்கிழமை ஸ்ரீ வள்ளி தேவசேனா சமேத ஸ்ரீ சண்முக சுவாமியின் திருக்கல்யாணமும், மின் அலங்காரத்தில் வீதி உலாவும் நடைபெற்றது.