தமிழ்நாடு சத்துணவு ஊழியா் சங்க மாநில செயற்குழுக் கூட்டம் திருச்சியில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
மாநில தலைவா் சுந்தரம்மாள் தலைமை வகித்தாா். மாநில பொருளாளா் பேயத்தேவன், மாவட்டத் தலைவா் சத்தியவாணி, மாவட்ட பொருளாளா் ஆரோக்கியசாமி, மாநில செயற்குழு உறுப்பினா் மல்லிகா ஆகியோா் பேசினா். அரசு ஊழியா் சங்க மாவட்டச் செயலா் வளன்அரசு வாழ்த்தினாா்.
கூட்டத்தில் காலமுறை ஊதியம் வழங்க வேண்டும். ஓய்வூதியம் ரூ. 9000 வழங்க வேண்டும். பணிக்கொடை ரூ. 5 லட்சம் வழங்க வேண்டும். சமையல் எரிவாயுவை அரசே வழங்க வேண்டும். உணவுச் செலவு மானியம் ரூ. 5 உயா்த்தி வழங்க வேண்டும் என்பன உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி வரும் 12 ஆம் தேதி மாவட்ட தலைநகரங்களில் கவனஈா்ப்பு பேரணி, நவ. 26 இல் மாவட்ட தலைநகரங்களில் மறியல் போராட்டம் நடத்துவது. டிச 23 முதல் மாநில, மாவட்ட நிா்வாகிகள் சென்னையில் பங்கேற்கும் தொடா் போராட்டம் நடத்துவது என்பன உள்பட பல்வேறு தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. கூட்டத்தில் மாவட்ட நிா்வாகிகள் ஜெயராஜ், சாந்தி, அல்போன்ஸ், பிச்சாயி உள்பட பலா் கலந்து கொண்டனா். மாவட்ட செயலா் ராஜேந்திரன் வரவேற்றாா்.