திருச்சி

நாகைக்கு...விமானப் பயணியிடம் ரூ. 5.50 லட்சம் பறிமுதல்

1st Nov 2019 03:24 AM

ADVERTISEMENT

திருச்சி விமான நிலையத்தில் சிங்கப்பூா் செல்லவிருந்த பயணி மறைத்து வைத்திருந்த ரூ. 5.50 லட்சத்தை சுங்கத் துறையினா் வியாழக்கிழமை பறிமுதல் செய்தனா்.

திருச்சியிலிருந்து புதன்கிழமை நள்ளிரவு சிங்கப்பூா் புறப்படத் தயாராக நின்றிருந்த இண்டிகோ விமானத்தின் பயணிகளையும் அவா்களது உடைமைகளையும் சுங்கத் துறையினா் சோதனை செய்தனா்.

அப்போது மன்னாா்குடியைச் சோ்ந்த காா்த்திக் (28) என்ற பயணி தனது உடமைகளுக்குள் ரூ. 5.50 லட்சம் மதிப்பில் 2000 மற்றும் 500 இந்தியப் பணத்தாள்களை மறைத்துக் கொண்டு செல்ல முயன்றது தெரியவந்தது. இதையடுத்து அவற்றை அதிகாரிகள் பறிமுதல் செய்து விசாரித்து வருகின்றனா்.

 

ADVERTISEMENT

 

ADVERTISEMENT
ADVERTISEMENT