திருச்சி கோவிந்தம்மாள் தமிழ் மன்ற நிறுவனர் மறைந்த ப.நாகராசனின் தமிழ்த்தொண்டைப் பாராட்டிடும் வகையில், வியாழக்கிழமை அவரது குடும்பத்துக்கு பொற்கிழி வழங்கப்பட்டது.
திருச்சி தமிழ்ச்சங்க வளாகத்தில் வியாழக்கிழமை நடைபெற்ற விழாவுக்கு, மாவட்ட மைய நூலக வாசகர் வட்டத் தலைவர் கவிஞர் வீ. கோவிந்தசாமி தலைமை வகித்தார். கோவிந்தம்மாள் மன்றத் தலைவர் வே.சந்தானகிருஷ்ணன் வரவேற்றார். ப.நாகராசனின் தமிழ்ச்சேவையைப் பாராட்டி இலக்கிய வாசல் அமைப்புத் தலைவர் கி. கிருஷ்ணமூர்த்தி, கவிஞர்கள் லால்குடி த.முருகானந்தம், ராசு நாச்சிமுத்து, வாளசிராமணி, க.செல்வராசன், க. மாரிமுத்து, இனங்கூர் பெ.கவி பெரியசாமி ஆகியோர் கவிதை வாசித்தனர். தொடர்ந்து நாகராசனின் குடும்பத்தினர்களான சந்திரா மற்றும் ரெங்கராஜன் ஆகியோரிடம் தமிழஞறிஞர்கள் தமிழ் இலக்கிய ஆய்வுப்பண்ணை நிறுவனர் ச.சாமிமுத்து, எழுதமிழ் இயக்கத் தலைவர் மு.குமாரசாமி, திருக்குறள் பேரவைச் செயலர் கேசவன், ஜனதா சக்தி மாத இதழாசிரியர் கே.ஜான்குமார், செண்பகத் தமிழ் அரங்கின் பொறுப்பாளர் ராச.இளங்கோவன், திருச்சி மாவட்ட எழுத்தாளர் சங்கத்
தலைவர் ஜவஹர் ஆறுமுகம் ஆகியோர் இணைந்து ரூ.1.20 லட்சத்துக்கான காசோலையை வழங்கினர்.
நிறைவில் வழக்குரைஞர் க.ராதாகிருஷ்ணன் நன்றி கூறினார்.ஏற்பாடுகளை கோவிந்தம்மாள் மன்ற பொறுப்பாளர் நா.பாலமுருகன் செய்திருந்தார்.