மனித வள மேம்பாட்டு அமைச்சகத்தால் அமைக்கப்பட்ட கூட்டு இட ஒதுக்கீடு அதிகார அமைப்பின் மூலமாக, திருச்சி தேசியத் தொழில்நுட்பக் கழகத்தில் கல்விப் பயில 1049 மாணவர்கள் தேர்வு செய்யப்படவுளளனர்.
இதுகுறித்துஇக்கழகத்தின் இயக்குநர் மினி ஷாஜி தாமஸ் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகத்தால் அமைக்கப்பட்ட கூட்டு இட ஒதுக்கீடு அதிகார அமைப்பின் மூலம், நாடு முழுவதும் உள்ள 28 அரசு உதவி பெறும் தேசிய தொழில் நுட்பக் கழகங்களில் தரவரிசை அடிப்படையில், மத்திய அரசு விதிகளின்படி இணையதளத்தின் வாயிலாக மாணவர்களுக்கான இட ஒதுக்கீடு செய்யப்படுகிறது.
இந்த ஆண்டுக்கான இணைய வழிக் கலந்தாய்வு ஏழு சுற்றுகளாக நடைபெறவுள்ளது.முதல் சுற்று முடிவுகள் ஜூன் 27 ஆம் தேதி அறிவிக்கப்பட்டது.
திருச்சி தேசிய தொழில் நுட்பக் கழகத்தில் உள்ள 1049 இடங்களில், 50 சதவிகிதம் தமிழக மாணவர்களுக்கும்,50 சதவிகிதம் பிற மாநிலத்தவர்களுக்கும் ஒதுக்கீடு செய்யப்படும்.இவற்றில் 174 இடங்கள் மாணவிகளுக்கு மட்டும் ஒதுக்கப்படும். தேர்வு செய்யப்பட்ட மாணவர்கள் இடஒதுக்கீட்டிற்கான ஆணையைப் பெற்றுக் கொள்ள வேண்டும். அவ்வாறு பெற்றுக்கொள்ளாத மாணவர்களின் இடங்கள் பிற மாணவர்களுக்கு தரவரிசை அடிப்படையில் தொடர்ந்து வரும் சுற்றுகளில் நிரப்பப்படும்.