திருச்சி

மார்க்சிஸ்ட் கம்யூ. கட்சியினர் தெருமுனை பிரசாரம்

31st Jul 2019 09:49 AM

ADVERTISEMENT

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி திருச்சியில் நடைபெறஉள்ள ஆர்ப்பாட்டம் குறித்து, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் திருவானைக்கா, ஸ்ரீரங்கம் பகுதிகளில்  செவ்வாய்க்கிழமை தெருமுனை பிரசாரத்தை நடத்தினர்.
வீட்டு வரி, சொத்து வரி உயர்வைக் கண்டித்தும், உள்ளாட்சித் தேர்தலை உடனடியாக நடத்தக் கோரியும்,  உய்யக்கொண்டான் வாய்க்கால், காவிரி,  கொள்ளிடம் ஆறுகளில் கழிவுநீர் கலப்பதைத் தடுக்க வலியுறுத்தியும் திருச்சியில் ஆக.1 ஆம் தேதி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநிலச் செயலர் பாலகிருஷ்ணன் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெறஉள்ளது.
இதுகுறித்து ஸ்ரீரங்கம், திருவானைக்கா பகுதிகளில் செவ்வாய்க்கிழமை பகுதிச் செயலர் வேளாங்கண்ணி தலைமையில் தெருமுனை பிரசாரம் நடைபெற்றது. கட்சியின்  மாவட்டச் செயலர் ராஜா, மாவட்ட நிர்வாகக் குழுவைச் சேர்ந்த வீரமுத்து, ரகுபதி, சுந்தரம் உள்ளிட்டோர் கூட்டத்தில் பங்கேற்று பேசினர்.
 

ADVERTISEMENT
ADVERTISEMENT